கோவிட் 19 | நாட்டில் இன்று நண்பகல் வரையில், மொத்தம் 2,154 கோவிட் -19 புதிய நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளன.
மாவட்டங்களுக்கு இடையேயான எல்லை கட்டுப்பாடுகள் நீக்கப்படுவதற்கு ஒரு நாள் முந்தைய நிலையில், கிள்ளான் பள்ளத்தாக்கு மற்றும் ஜொகூரில் எந்த முன்னேற்றமும் இல்லை.
ஜொகூரில், சராசரியாக 316-ஆக இருந்த பாதிப்புகள், இன்று 463-ஆக பதிவாகியுள்ளன.
மேலும், இன்று 6 இறப்புகள் பதிவாகியுள்ளன, இறந்தவர்கள் அனைவரும் மலேசியர்கள். ஆக, நாட்டில் இதுவரை இந்நோய்க்குப் பலியானவர் எண்ணிக்கை மொத்தம் 1,159 ஆகும்.
இதற்கிடையில், இன்று 3,275 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அவசரப் பிரிவில் 184 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் 87 பேருக்குச் சுவாசக் கருவியின் உதவி தேவைப்படுகிறது.
நாட்டில் இன்று அனைத்து மாநிலங்களிலும் புதியத் தொற்றுகள் பதிவாகியுள்ளன.
மாநிலங்கள் வாரியாகப் புதியத் தொற்றின் எண்ணிக்கை பின்வருமாறு :-
சிலாங்கூர் (794), ஜொகூர் (463), சரவாக் (250), பினாங்கு (119), பேராக் (109), கோலாலம்பூர் (108), சபா (97), நெகிரி செம்பிலான் (77), கிளந்தான் (57), பஹாங் (38), திரெங்கானு (16), மலாக்கா (10), கெடா (9), புத்ராஜெயா (4), லாபுவான் (2), பெர்லிஸ் (1).
இன்று 10 புதியத் திரளைகள் கண்டறியப்பட்டன. அவற்றுள் 8 பணியிடம் சார்ந்தவை.