அரசியல் நெருக்கடியால் எஸ்பிஆர்எம் விசாரணையா?

முன்னால் நீர், நிலம்  மற்றும் இயற்கைவள அமைச்சருக்குப் பணி நிமித்தம் செயலாற்றிய இரண்டு முன்னாள் அதிகாரிகள்  மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தால் விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.

விசேச பணி அதிகாரியாக இருந்த கா உதயசூரியன் மற்றும் அரசியல் செயலாளராக இருந்த பஸ்லி பய்சால் பின் முகமாட் ரசாலி ஆகிய இருவரும் தற்போது விசாரணைக்காக அந்த ஆணையத்தால் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இன்று புத்ரா ஜெயா மஜிஸ்திரேட் நீதிமன்றம் கொண்டுவரப்பட்ட அவர்களை வரும் புதன்கிழமை அந்த ஆணையம்்விடுவிக்க வேண்டும் என மஜிஸ்திரேட் சா பின் அப்டுல் அலிம் ஆணையிட்டார்.

தற்சமயம் அவசரக்கால பிரகடனத்தில் ஆட்சி புரியும் பெரிக்காத்தான் நேசனல் என்ற தேசியக்கூட்டணி, அம்னோவின் ஆதரவு குறைவால், அது தனது பெரும்பான்மையை இழக்க நேரிடும். அதன் தாக்கத்தால் அதன் ஆட்சி கவிழும் சூழல் உள்ளது.

ஆட்சியை தற்காக்க வேண்டுமானால், அதற்கான ஆதரவைப் பெறப் பிற கட்சிகளில் உள்ள எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தேவையாகும். அவ்வகையில் ஆதரவைத்திரட்ட மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் மற்றும் காவல்துறை, வருமானவரி இலாக்கா போன்றவை முடுக்கி விடப்பட்டுள்ளதாக பாக்காத்தான் ஹரப்பான அமைப்பின் உச்ச மன்றம் தனது வன்மையான கண்டனத்தை நேற்று தெரிவித்தது.

“உதாரணமாக, எதிர்க்கட்சி உறுப்பினர்களான லிம் குவான் இங், அவரது மனைவி, லாரி சிங், ஸ்டிவான் சூங் மற்றும் நீர், நிலம்  மற்றும் இயற்கைவள துறையின் முன்னாள் அமைச்சர்  சேவியர் ஜெயகுமார் ஆகியோரும் அடங்கும்” என்று உதாரணம் காட்டியது.

உதயசூரியன் மற்றும் பஸ்லி பய்சால் விசாரணை அவ்வகையில் தேர்வு செய்யப்பட்டு ஒரு அரசியல் நெருக்கத்தை உருவாக்கும் வகையில் அமைந்துள்ளதாகவே யூகிக்கப்படுகிறது.