இடங்களுக்கான பேச்சுவார்த்தைகளை பி.எச். தொடங்கியது

அடுத்தப் பொதுத் தேர்தலை (ஜி.இ.) எதிர்கொள்ள, பக்காத்தான் ஹராப்பான் (பி.எச்.) நாற்காலிகளுக்கான பேச்சுவார்த்தையைத் தொடங்கியுள்ளது என்று அதன் தலைவர் அன்வர் இப்ராஹிம் தெரிவித்தார்.

அன்வாரின் கூற்றுப்படி, பெர்சத்து கினாபாலு முற்போக்கு அமைப்பு (உப்கோ) சமர்ப்பித்தத் திட்டங்கள் உட்பட, பிற நட்பு கட்சிகளுக்கான இடங்களையும் பி.எச். சீர்தூக்கிப் பார்க்கும்.

“தேர்தல் இயந்திரங்களின் ஒத்துழைப்பு மற்றும் குறிப்பாக பி.எச். உறுப்புக் கட்சிகள் சம்பந்தப்பட்ட இருக்கை பேச்சுவார்த்தைகளைத் தொடங்குவது, அத்துடன் பிற கூட்டாளர் கட்சிகளுக்கான ஒதுக்கீட்டைக் கணக்கில் எடுத்துக்கொள்வது உள்ளிட்ட பல விஷயங்களை பி.எச். தலைமை மன்றம் முடிவு செய்துள்ளது.

“யு.பி.கே. தலைவர் வ்லிஃப்ரெட் மடியஸ் தங்காவ் அவர்களிடமிருந்தும் திட்டங்கள் வந்துள்ளன, அவையும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். இப்போதைக்கு நாங்கள் ஒரு செய்தித் தொடர்பாளரை நியமிப்போம்,” என்று அவர், இன்று பெட்டாலிங் ஜெயாவில் உள்ள பி.கே.ஆர். தலைமையகத்தில் செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

இருப்பினும், அன்வர், பி.எச்.-இல் இணையாத ஓர் எதிர்கட்சியான யு.பி.கே.-வின் முன்மொழிவு குறித்து மேலும் கருத்துத் தெரிவிக்கவில்லை.

இன்று, சர்வதேச மகளிர் தினத்துடன் இணைந்து, பிரச்சினைகளை எதிர்கொள்ளும் பெண்களுக்கு உதவும் வகையில் பி.கே.ஆரின் புதிய முயற்சியைத் தொடங்கும் ஒரு நிகழ்ச்சிக்காக பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது.

இதற்கிடையில், பி.கே.ஆர். தகவல் தொடர்பு இயக்குநர் பாஹ்மி ஃபட்ஸில், பி.எச். உறுப்புக் கட்சிகளுக்கு இடையிலான இருக்கை பேச்சுவார்த்தைகள் “அடுத்தக் கட்டத்தை” எட்டியுள்ளது என்றார்.

இந்த நிலையில், மற்ற எதிர்க்கட்சிகளுடன் கலந்துரையாடுவதற்கு முன்பு அவர்கள் பி.எச். உறுப்புக் கட்சிகள் மீது கவனம் செலுத்துகிறார்கள், என்றார்.

அடுத்த ஜி.இ.-யில் அம்னோவுடன் இணைந்து பணிபுரியும் வாய்ப்பையும் இருவரும் நிராகரிக்கவில்லை.