‘விவசாயத் துறை இன்னும் பிரபலமாகவில்லை’ – சரவணன்

வேளாண் துறையில் நிலவும் 18,547 காலியிடங்களில், 2,982 மட்டுமே கடந்த ஆண்டு நிரப்பப்பட்டதாக மனிதவளத்துறை அமைச்சர் எம் சரவணன் தெரிவித்தார்.

சமூகப் பாதுகாப்பு அமைப்பின் வேலைவாய்ப்பு காப்பீட்டு திட்டப் (எஸ்ஐபி பெர்கெசோ) புள்ளிவிவரங்கள், வேலை தேடுபவர்கள் (பெரும்பாலோர் பள்ளியிலிருந்து விடுபவர்கள் மற்றும் பட்டதாரிகள்) மத்தியில் விவசாயத் துறை இன்னும் பிரபலமடையவில்லை என்பதைக் காட்டுகிறது என்றார்.

“விவசாயத் துறை இளைஞர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் மிகவும் ஆக்கப்பூர்வமான மற்றும் மறுபெயரிடும் வேலைகள் இதுவாக இருக்கலாம்,” என்று அவர் இன்று நடைபெற்ற ‘2021 அக்ரிகோமோடிட்டி தொழில் கண்காட்சி’யின் தொடக்க விழாவில் உரையாற்றிய போது கூறினார்.

கோவிட் -19 தொற்றுநோயின் காரணமாக, அனைத்து துறைகளிலும் புதிய வெளிநாட்டு தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துவதில் முடக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, மனிதவளப் பற்றாக்குறை பிரச்சினையில் வேளாண் பொருட்கள் துறையில் தொழில்துறையின் சிரமங்களைப் புரிந்துகொண்டதாக சரவணன் கூறினார்.

ஒரு குறுகியக் காலத் தீர்வாக, பாதிக்கப்பட்ட முதலாளிகளுக்கு அரசாங்கம் நெகிழ்வுத்தன்மையை வழங்கியுள்ளது, வெளிநாட்டுத் தொழிலாளர்களைத் தொடர்ந்து பணியில் அமர்த்த முடியாவிட்டால், அவர்கள் அனைவரையும் அல்லது ஒரு பகுதியினரை மற்ற நிறுவனங்களுக்கு முதலாளி பரிமாற்ற விண்ணப்பத் திட்டத்தின் மூலம் மாற்றலாம்.

மனிதவள அமைச்சும் உள்துறை அமைச்சும் சட்டவிரோதக் குடியேற்றவாசிகள் மறுசீரமைப்பு திட்டத்தை, 16 நவம்பர் 2020 முதல் 20 ஜூன் 2021 வரை தொடங்கியுள்ளன, இதில் வருவாய் மறுசீரமைப்பு திட்டம் மற்றும் மனிதவள மறுசீரமைப்பு திட்டம் ஆகியவை அடங்கும்.

அதுமட்டுமின்றி, தொழில் உருவாக்கத் திட்டமான “பெஞ்ஞானாகெர்ஜாயா” திட்டத்தின் கீழ், “மலேசியமயமாக்கல்” (மலேசியனிஸேசன்) என்ற முன்முயற்சிகளும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன, வெளிநாட்டு தொழிலாளர்களின் இடத்தை உள்ளூர் தொழிலாளர்களால் மாற்றும் திட்டம், இதன்மூலம் சம்பந்தப்பட்ட முதலாளிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது, இது மாத சம்பளத்தின் 40 விழுக்காடு அல்லது அதிகபட்சமாக RM4,000.

“மாதச் சம்பளத்தில் RM500 அல்லது 20 விழுக்காடு, அல்லது எது அதிகமாக இருக்கிறதோ, அது நேரடியாக ஊழியருக்கு வழங்கப்படும். இந்த ஊக்கத்தொகையை ஆறு மாதக் காலத்திற்குப் பெறலாம்,” என்றார்.

இன்று தொடங்கி இரண்டு நாட்களுக்கு, மெய்நிகரில் நடைபெறவுள்ள 2021 அக்ரிகோமோடிட்டி தொழில் கண்காட்சி, 26 முதலாளிகளால் 8,600-க்கும் மேற்பட்ட வேலை வாய்புகளை வழங்கவுள்ளது.

இக்கண்காட்சியைத் தோட்டத் தொழில்கள் மற்றும் பொருட்கள் அமைச்சு, பெர்கேசோ மற்றும் மனிதவளத் துறை அமைச்சுடன் இணைந்து ஏற்பாடு செய்துள்ளது.

வேலை தேடுபவர்கள் https://careerfair.perkeso.gov.my என்ற இணைப்பில் பதிவு செய்யலாம்.

  • பெர்னாமா