ஊழல் தடுப்பு ஆணையம் உதயசூரியனை விடுவித்தது  

விசாரணைக்காக ஊழல் தடுப்பு ஆணையத்தால் தடுத்து வைக்கப்பட்ட உதயசூரியன் எவ்வித குற்றச்சாட்டுகளும் இன்றி இன்று விடுவிக்கப்பட்டார்.

உச்சாகமாக காணப்பட்ட உதயசூரியன், ஊழல் தடுப்பு ஆணையத்தினர் மிகவும் கண்ணியத்துடன் நடந்து கொண்டதாகவும், அவர்களின் விசாரணைக்கு தான் முழுமையான பங்களிப்பை வழங்கியதாகவும் கூறினார். அதோடு இந்த இக்கட்டான காலகட்டத்தில் தன் நலம் கருதி செயல்பட்ட அனைவருக்கும் தனது நன்றியையும் பதிவு செய்தார்.

புத்தராஜெய மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் விடுவிக்கப்பட்ட போது, அவர் மீது எந்தவித குற்றச்சாட்டுகளும் பதிவு செய்யப்படவில்லை.

இருப்பினும் அவர் ரிம 20,000 ஜாமின் கட்டவேண்டும் என்ற ஊழல் தடுப்பு ஆணையத்தின் மனுவை மஜிஸ்திரேட் சா வீரா பின் அப்துல் ஹலிம் தள்ளுபடி செய்துவிட்டு, ரிம 10,000 மட்டுமே போதுமானது எனத்தீர்ப்பளித்தார்.

முன்னால் நீர், நிலம்  மற்றும் இயற்கைவள அமைச்சருக்குப் விசேச பணி அதிகாரியாக இருந்த உதயசூரியன் மற்றும் அரசியல் செயலாளராக இருந்த பஸ்லி பய்சால் பின் முகமாட் ரசாலி ஆகிய இருவரும் விசாரணைக்காக அந்த ஆணையத்தால் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். இன்று இவர்கள் இருவருமே எவ்வித குற்றமும் சாட்டப்படாமல்  விடுவிக்கப்பட்டனர்.