பேராக் டிஏபி தேர்தல்: ங்கா குழுவுக்குக் குலா குழுவினர் சவால்

இந்த ஞாயிற்றுக்கிழமை, பேராக் டிஏபி 2021-2024 பதவிக்காலத்திற்கான மாநிலத் தலைமைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இது தற்போது, ங்கா கோர் மிங் அணிக்கும் டிஏபி தேசியத் துணைத் தலைவர் எம் குலசேகரன் தலைமையிலான அணியினருக்கும் இடையிலான போட்டியாக நிகழவுள்ளது.

2010-ம் ஆண்டில், குலசேகரன் மற்றும் தாமஸ் சு கியோங் சியோங் ஆகியோர் ங்காவின் வழிகாட்டியும் உறவினருமான ங்கே கூ ஹாம் குழுவினரால் தோற்கடிக்கப்பட்டனர்.

இந்த முறை, அவரைச் சவால் செய்பவர்கள், ங்கா மற்றும் ங்கே-வின் விமர்சகர்களான குழு ஒன்று வேட்புமனுவைப் பகிரங்கமாக அறிவித்துள்ளனர்.

இந்த ஞாயிற்றுக்கிழமை, தேர்தல் பேராக் டிஏபியின் 15 செயற்குழு இடங்களுக்கானது. ங்கா மற்றும் குலசேகரன் அணிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 30 வேட்பாளர்கள் மட்டுமே உள்ளனர்.

309 கிளைகளைச் சேர்ந்த 2,135 பிரதிநிதிகளால் அவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

டிஏபி துணைச் செயலாளராக இருக்கும் 48 வயதான ங்கா, மாநிலத் தலைவர் பதவியையும் வகிக்கிறார்.

ஜூன் மாதம் நடைபெறவுள்ள மத்தியத் தேர்தலில் போட்டியிட விரும்பும் ங்கா, மத்தியத் தேர்தலில் தனது வாய்ப்புகளைப் பிரகாசமாக்க, பேராக் மாநிலக் கட்சித் தேர்தலில் பெரிய அளவில் வெற்றி பெற வேண்டும்.

தொடர்பு கொண்டபோது, “பேசுவதை விட செயல் முக்கியமானது,” என்று ங்கா கூறினார்.

ங்கே மற்றும் ங்கா தலைமையில், பேராக் டிஏபி 2013 மற்றும் 2018 தேர்தல்களில் போட்டியிட்ட அனைத்து இடங்களையும் கைப்பற்றி, ஏழு நாடாளுமன்ற மற்றும் 18 மாநிலச் சட்டமன்றங்களையும் வென்றது.

எவ்வாறாயினும், சில டிஏபி சட்டமன்ற உறுப்பினர்களின் கட்சித் தாவும் நடவடிக்கைகளால் அவர்களின் தலைமை சற்று களங்கப்படுத்தப்பட்டது, இதன் விளைவாக 2009 மற்றும் 2020-ஆம் ஆண்டுகளில், பேராக் பி.எச். அரசாங்கம் இரண்டு முறை வீழ்ந்தது.

சமீபத்திய பால் யோங் (துரோனோ சட்டமன்ற உறுப்பினர்) மற்றும் எ சிவசுப்பிரமணியம் (புந்தோங் சட்டமன்ற உறுப்பினர்) ஆகியோர் கட்சியிலிருந்து விலகி, பெர்சத்துவுடன் இணைந்தனர்.

மலேசியாகினி தொடர்பு கொண்டபோது, ​​கட்சியை வழிநடத்த பேராக் டிஏபிக்குப் “புதிய தலைமை” தேவை என்று சூ கூறினார்.

“பேராக்கில் கட்சி தாவல்கள் ஏன் எப்போதும் நடக்கின்றன என்று அடிமட்டத்தினர் எங்களிடம் கேட்கின்றார்கள், அதனால்தான் புதியத் தலைமையை நாங்கள் பரிந்துரை செய்கிறோம் என்று அவர்கள் கோரினர்.

“என்ன பிரச்சினை? இது தலைமைக்குள்ளேயே நாம் தீர்க்க வேண்டிய ஒன்று,” என்று டிஏபியின் அமைப்பு உதவி செயலாளராக இருக்கும் சூ கூறினார்.

குலா என்று நன்கு அறியப்பட்ட குலசேகரன், ங்கே மற்றும் ங்கா தலைமையின் கீழ், பேராக் டிஏபி அனைத்தையும் உள்ளடக்கியதாக இல்லை என்றும், சட்டமன்ற உறுப்பினர்களின் கட்சி தாவும் நடவடிக்கைகளுக்குப் பங்களித்ததாகவும் கூறினார்.

“கொள்கை ரீதியான கட்சி உறுப்பினர்களாக, எங்கள் நிலைப்பாட்டை வெளிப்படுத்த நாங்கள் ஒன்றிணைந்தோம். பழைய போட்டி, பழைய ஆணாதிக்க அரசியல் என்றில்லாமல், அனைத்தையும் உள்ளடக்கிய அரசியல் மிக முக்கியமானது, கருத்து வேறுபாடு காரணமாக சமீபத்தில் காணப்பட்ட எந்தப் பிரிவும் இனி இருக்கக்கூடாது,” என்று அவர் கூறினார்.