கோவிட் -19 : திரெங்கானுவில் பல எல்.எச்.டி.என். அலுவலகங்கள் 3 நாட்களுக்கு மூடப்பட்டன

துப்புரவு பணிகளுக்காக திரெங்கானுவில் உள்ள பல உள்நாட்டு வருவாய் வாரியக் (எல்.எச்.டி.என்.) கிளை அலுவலகங்கள் நாளை முதல் மார்ச் 16 வரை தற்காலிகமாக மூடப்படும் என்று எல்.எச்.டி.என். இன்று தெரிவித்துள்ளது.

எல்.எச்.டி.என். வெளியிட்ட ஓர் அறிக்கையில், திரெங்கானு மற்றும் கிளாந்தான் மாநில இயக்குநர் அலுவலகம், கோலத் திரெங்கானு விசாரணைக் கிளை, கெமாமான் மற்றும் டுங்குன் வருவாய் சேவை மையங்கள் (பி.கே.எச்.) இதில் அடங்கும்.

அதற்கு மாற்றாக, உலு திரெங்கானு மற்றும் பெசூட் பி.கே.எச். கிளைகளைப் பொது மக்கள் நாடலாம் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்காலிகமாக மூடப்பட்ட எல்.எச்.டி.என் அலுவலகங்கள் மற்றும் கிளைகளின் பட்டியலை http://phl.hasil.gov.my/pdf/pdfam/Notis_Penutupan_Cawangan_LHDNM_Covid_19_1.pdf என்ற இணைப்பு மூலமும் பொது மக்கள் அணுகலாம்.

ஐஆர்பி சேவை முகப்புகளுக்கு வரும் வாடிக்கையாளர்கள், கோவிட் -19 தடுப்புக்கான செந்தர இயக்க நடைமுறைகளை (எஸ்ஓபி) எப்போதும் கடைப்பிடிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மேலதிக தகவல்களுக்கு, ஹசில் கேர் 03-8911 1000 அல்லது 603-8911 1100 (வெளிநாடுகள்) தொடர்பு கொள்ளவும்; ஹாசில் லைவ் சேட் (HASiL Live Chat); மற்றும் எல்.எச்.டி.என்.-இன் அதிகாரப்பூர்வத் தளமான https://maklumbalaspelanggan.hasil.gov.my/MaklumBalas/ms-my/ -இல் உள்ள கருத்து படிவத்தின் மூலமும் தொடர்புகொள்ளலாம்.

  • பெர்னாமா