சமூகத்தில், குழப்பத்தை நிவர்த்தி செய்வதற்காக அவசரகாலம் (தொற்று நோய்களைத் தடுக்கும் மற்றும் கட்டுப்படுத்துதல்) (திருத்தம்) 2021-ம் ஆண்டின் கட்டளைச் சட்டத்தின் கீழ், RM10,000 தண்டம் விதிக்கக்கூடியக் குற்றங்களை அரசாங்கம் விவரிக்கும் என்று பிரதமர் திணைக்கள அமைச்சர் (நாடாளுமன்றம் மற்றும் சட்டம்) தக்கியுட்டின் ஹசான் தெரிவித்தார்.
நாளை நடைபெறும் கோவிட் -19 அவசரநிலை மேலாண்மை தொழில்நுட்பக் குழு கூட்டத்தில் இது குறித்து விவாதிக்கப்படும் என்றார்.
“தனிநபர்களுக்கு RM10,000 மற்றும் நிறுவனங்களுக்கு RM50,000 ஆகியவற்றின் கூட்டு ஆணையை நாங்கள் தொடர்ந்து பராமரிப்போம், ஆனால் குற்றங்களைச் செய்பவர்களுக்குச் சம்மன் வழங்குவது உட்பட அதன் செயல்பாட்டைத் தீர்மானிக்க அரசாங்கம் உத்தரவாதம் அளித்துள்ளது,” என்று அவர் இன்று தெரிவித்தார்.
மேலும் கருத்து தெரிவித்த தக்கியுட்டின், முகக்கவரி அணியாதது போன்ற குற்றம் சிறியதாக இருப்பதால், குற்றவாளிக்கு RM10,000 தண்டம் விதிக்கக்கூடாது என்றார்.
“சட்டத்தின் கண்டிப்பு இருக்க வேண்டும், ஆனால் அதே நேரத்தில் இருவருக்கும் இடையில் ஒரு சமநிலையை உருவாக்க விவேகமும் இருக்க வேண்டும்,” என்று அவர் கூறினார்.
- பெர்னாமா