மார்ச் 16 முதல் 29 வரை பஹாங், ரொம்பின், தியோமான் தீவில் இறுக்கமான நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை (பி.கே.பி.டி.) செயல்படுத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளது என்று மூத்த அமைச்சர் (பாதுகாப்பு) இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்தார்.
நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை தொழில்நுட்பக் குழுவில் (பி.கே.பி) பல்வேறு நிறுவனங்களின் இடர் மதிப்பீட்டைக் கணக்கில் எடுத்துக்கொண்டும், சுகாதார அமைச்சின் ஆலோசனைகளையும் பெற்ற பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.
“இந்த வட்டாரச் சமூகத்தில், தொற்றுநோய் பாதிப்புகளில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது என்பதை சுகாதார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.
“மார்ச் 14 வரை, சுகாதார அமைச்சு மேற்கொண்ட 48 திரையிடல் சோதனைகளில், 16 நேர்மறை சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன,” என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மார்ச் 17 முதல் 30 வரை, சபாவின் நபாவானில் பி.கே.பி.யை மேலும் 14 நாட்களுக்கு நீட்டிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளதாகவும் இஸ்மாயில் சப்ரி கூறினார்.
- பெர்னாமா