`முழுமையான பி.கே.பி.க்குத் தேவை இருக்காது` – பிரதமர்

நாட்டில் முழுமையான அல்லது ஒரு மாநிலத்தை உள்ளடக்கிய நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை (பி.கே.பி.) அரசாங்கம் இனி செயல்படுத்தத் தேவையில்லை என்று பிரதமர் கூறினார்.

தேசியக் கோவிட் -19 நோய்த்தடுப்பு திட்டத்தைச் செயல்படுத்தப்படுவதனால், முழுமையான பி.கே.பி.க்குத் தேவை இருக்காது என்று முஹைதீன் யாசின் கூறினார்.

“பி.கே.பி. இனி வட்டாரம் மற்றும் தொடர்புடைய திரளைகளில் மட்டும் கவனம் செலுத்தி செயல்படுத்தப்படும்,” என்று அவர் கூறினார்.

பொருளாதார நடவடிக்கைகளில் எதிர்மறையான தாக்கத்தைக் குறைக்க, அறிவியல் மற்றும் தரவுகளின் அடிப்படையில், இலக்கு வைக்கப்பட்ட கோவிட் -19 பரிமாற்றக் கட்டுப்பாட்டு மூலோபாயத்தை அரசாங்கம் செயல்படுத்தும் என்று முஹைதீன் கூறினார்.

நாட்டில், கோவிட் -19 பரவலைத் தடுக்க, 2020 மார்ச் 18 அன்று பி.கே.பி. நடைமுறைக்கு வந்தது.