ஷாரீர்: ‘ஷாஹிடான் கூற்றுப்படி, பெர்லிஸில் ஜிஇ15 சுவாரஸ்யமாக இருக்கும்’

15-வது பொதுத் தேர்தலில் (ஜிஇ15), பெர்லிஸ் அம்னோ, தேசிய முன்னணியிலிருந்து விலகி, தேசியக் கூட்டணியுடன் இணையும் என்றால், அது ஒரு புதிய அரசியல் சூழ்நிலையைத் திறக்கும் என்று அம்னோ மூத்தத் தலைவர் ஷாரீர் சமாட் கூறினார்.

அடுத்த தேர்தலுக்கு முன்னதாக, பெர்சத்துவுடனான உறவுகளைக் கட்சி துண்டித்துவிடும் என்ற உச்சமன்ற முடிவை எதிர்த்து, பெர்லிஸ் அம்னோ தொடர்புத் தலைவர் ஷாஹிடான் காசிம் நேற்று வெளியிட்ட அறிக்கை குறித்து அவர் கருத்து தெரிவித்தார்.

“இதன் பொருள், பெர்லிஸ் அம்னோவைச் சேர்ந்த ஷாஹிடானும் அவரது குழுவினரும் தேசியக் கூட்டணி வேட்பாளர்களாக, அதன் சின்னத்தைப் பயன்படுத்து போட்டியிடுவார்கள், பெர்லிஸ் பாஸ்-உம் இதைப் பின்பற்றும்.

“மறுபுறம், ஷாஹிடானைப் பின்பற்றாத அம்னோ வேட்பாளர்கள், தேசிய முன்னணி வேட்பாளர்களாக அதன் சின்னத்தைப் பயன்படுத்துவார்கள்.

“இது மும்முனை போட்டியை உருவாக்கும், ஷாஹிடானின் விருப்பங்களை நாம் பின்பற்றினால் சுவாரஸ்யமாக இருக்கும்,” என்று ஷாரீர் நேற்றிரவு சமூக ஊடகப் பதிவு ஒன்றில் கூறினார்.

தேசியக் கூட்டணியுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் பெர்லிஸ் அம்னோ உறுதியாக இருப்பதாக ஷாஹிடான் வலியுறுத்தினார்.

“பெர்லிஸ் ஒரு முடிவை எடுத்தால், அவர்கள் (மத்திய அம்னோ) பெர்லிஸை ஓரங்கட்ட விரும்புகிறார்கள், ஆக தூக்கி எறியுங்கள்,” என்று அவர் கூறினார்.

மார்ச் 27-ஆம் தேதி நடைபெறவுள்ள அம்னோ மாநாட்டில், இந்த முடிவு இறுதி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

‘பல அம்னோ பிரிவுகள் பெர்சத்துவுடனான ஒத்துழைப்பை விரும்புகின்றன’

முன்னதாக, முன்னாள் அம்னோ உச்சமன்ற உறுப்பினர் அன்னுவார் மூசா, மார்ச் 6-ம் தேதி, கட்சி அல்லது மாநில அளவிலான தலைமையில் மேலும் பிளவுகள் ஏற்படும், பெர்சத்துவுடன் ஒத்துழைப்பைத் தொடர ஒரு நிலைப்பாடு எடுக்கப்படும் என்று சூசகமாகக் கூறினார்.

இதுவரை, பெர்லிஸ் மற்றும் சபா அம்னோ ஆகியவை, அம்னோ உச்சமன்ற முடிவுக்கு எதிராக தங்கள் நிலைப்பாட்டைக் கூறியுள்ளன.