நாட்டில் இன்று மதியம் வரையில், 1,327 கோவிட் -19 புதிய நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளன. 5 மாநிலங்களில் 100-க்கும் மேற்பட்ட தொற்றுகள் பதிவாகியுள்ளன.
356 தொற்றுகளுடன், அதிக எண்ணிக்கையிலான புதிய பாதிப்புகள் உள்ள மாநிலமாக சிலாங்கூர் உள்ளது, அதைத் தொடர்ந்து சரவாக் (276) மற்றும் பினாங்கு (205) மாநிலங்கள் உள்ளன.
100-க்கும் மேற்பட்ட புதிய நேர்வுகள் ஜொகூர் (141) மற்றும் கோலாலம்பூரில் (115) பதிவாகியுள்ளன.
நேற்றைய நிலவரப்படி, செயலில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை இன்று மீண்டும் அதிகரித்துள்ளது.
புதிய வழக்குகளின் எண்ணிக்கை குணப்படுத்தப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கையை விட அதிகரித்துள்ளது.
இன்று 1,247 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அவசரப் பிரிவில் 154 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் 65 பேருக்குச் சுவாசக் கருவியின் உதவி தேவைப்படுகிறது.
மேலும், 4 மரணங்கள் இன்று சம்பவித்துள்ளன. ஆக, நாட்டில் இதுவரை 1,233 பேர் இந்நோய்க்குப் பலியாகியுள்ளனர்.
இன்று, லாபுவான் தவிர மற்ற அனைத்து மாநிலங்களிலும் கூட்டரசுப் பிரதேசங்களிலும் புதியத் தொற்றுகள் பதிவாகியுள்ளன.
இன்று 5 புதியத் திரளைகள் – ஜொகூரில் 2, சபா, பினாங்கு மற்றும் சிலாங்கூரில் முறையே 1 – கண்டறியப்பட்டன. அவற்றுள் 4 பணியிடம் சார்ந்தவை.