இன்று, பினாங்கு டிஏபி தேர்தலில், பதவியிலிருந்த மூவர் தோல்வியடைந்தனர், அவர்களில் புக்கிட் கெலுகோர் நாடாளுமன்ற உறுப்பினர் ராம்கர்பால் சிங்-உம் ஒருவர்.
மற்ற இருவர், முன்னாள் தஞ்ஜோங் எம்.பி. ங் வெய் ஆய்க் மற்றும் முன்னாள் மாநில நிர்வாக கவுன்சிலர் டேன்னி லாவ் ஹெங் கியாங்.
முதல் 15 இடங்களைப் பெற போதுமான வாக்குகளைப் பெற அவர்கள் தவறிவிட்டனர்.
பினாங்கு துணை முதலமைச்சர் II பி இராமசாமி, மாநில நிர்வாக கவுன்சிலர் ஜைரில் கிர் ஜோஹாரி மற்றும் ஜெலுத்தோங் எம்.பி. ஆர்.எஸ்.என். ராயர் ஆகியோர் மாநில டிஏபி தலைமையின் புதிய முகங்கள்.
இருப்பினும், ஒரு குழு உறுப்பினராக நியமிக்கப்பட்ட பின்னர், ராம்கர்பால் தலைமை பதவிகளில் சேர்க்கப்பட்டார்.
புதியப் பினாங்கு டிஏபி தலைமை வரிசை :-
தலைவர் : சான் கோன் இயு
துணைத் தலைவர் : பி இராமசாமி
உதவித் தலைவர் : ஜைரில் கிர் ஜோஹரி, ஜகதீப் சிங் டியோ
செயலாளர் : லிம் ஹுய் யிங்
துணைச் செயலாளர்: லிம் சீயூ கிம்
பொருளாளர் : வோங் ஹோன் வாய்
உதவிப் பொருளாளர் : சூன் லிப் சீ
அமைப்பு செயலாளர்: ஜேசன் ஹங் மூய் லை
உதவி அமைப்புச் செயலாளர் : லே ஹோக் பெங், இயோ சூன் ஹின்
விளம்பரச் செயலாளர் : ஸ்டீவன் சிம் சீ கியோங்
உதவி விளம்பரச் செயலாளர் : சீர்லீனா அப்துல் ரஷீத்
அரசியல் கல்வி இயக்குநர் : தெஹ் லாய் ஹெங்
செயலவை உறுப்பினர்கள் : பீ பூன் போ, பீ பூன் சீ, ஆர்.எஸ்.என். ராயர், ராம்கர்பால் சிங், ஹெங் லீ லீ, சோங் எங்