சூக் விபத்து : 30 மணி நேரம் கழிந்தது, பலியான மூன்றாம் நபரின் உடல் மீட்கப்படவில்லை

நேற்று, சுங்கை பெசி-உலு கிள்ளான் (சூக்) அடுக்கு நெடுஞ்சாலை கட்டுமான இடத்தில் ஏற்பட்ட விபத்தில் இறந்த மூன்றாவது பாதிக்கப்பட்டவரின் சடலம், 31 மணி நேரத்திற்குப் பிறகும் மீட்கப்படாமல் உள்ளது.

பாதிக்கப்பட்டவரைத் தாக்கிய ‘கிரேன் லாஞ்சரை’ தூக்க முயற்சிக்கும் முன், தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினர் ‘யு பீம்’-ஐ நிலைப்படுத்த முயற்சிக்கின்றனர்.

நேற்று காலை 8.45 மணியளவில், நெடுஞ்சாலை கட்ட பயன்படுத்தப்படும் கிரேன் 120 அடி உயரத்தில் இருந்து பெரோடுவா பெஸ்ஸா காரின் மீது விழுந்து நொறுக்கியது.

பாதிக்கப்பட்ட இருவர் சம்பவ இடத்திலேயே இறந்தனர், மற்றொருவர் பின்னர் இறந்துவிட்டார் என்பது உறுதி செய்யப்பட்டது. இவர்கள் மூவரும் சீன நாட்டின் குடிமக்கள்.

மலேசிய குடிமகனான காரின் ஓட்டுநர் பலத்த காயமடைந்தார்.

ஆறு மாதங்களில் சூக் சம்பந்தப்பட்ட மூன்றாவது விபத்து இதுவாகும்.

பெய்ஜிங்கை தளமாகக் கொண்ட சீனா கம்யூனிகேஷன்ஸ் கன்ஸ்ட்ரக்சன் கோ லிமிடெட் (ஸ்கோல்), ஜெட்சன் கன்ஸ்ட்ரக்சன் சென்.பெர்., எக்கோன்பைல் ஹோல்டிங்ஸ் பெர்ஹாட் மற்றும் ஸெலன் பெர்ஹாட் ஆகியவை சூக்’கின் துணை ஒப்பந்தக்காரர்கள் ஆகும்.

சூக் திட்ட ஒப்பந்தக்காரர் “அமைக்கப்பட்ட எஸ்ஓபிகளுக்கு இணங்கியுள்ளார்” என்று முதற்கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டதாக பொதுத் துறை அமைச்சர் ஃபடில்லா யூசோஃப் நேற்று தெரிவித்தார்.

அதைத் தொடர்ந்து, சில எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் சுயாதீன விசாரணை மேற்கொள்ளப்படும் வரை சூக் திட்டத்தை நிறுத்துமாறு அழைப்பு விடுத்தனர்.