தேசியக் கூட்டணி அரசாங்கத்திலிருந்து விலகுவதற்கான சரியான தேதி எப்போது என்பதைத் தீர்மானிக்க, அம்னோ பொதுச் சபை இன்று கட்சித் தலைவர் மற்றும் அவர்களின் உச்சமன்ரத்திற்கு ஆணையை வழங்கியது.
இன்று முடிவடைந்த இரண்டு நாள் அம்னோ மாநாட்டில் இந்த முடிவு எட்டப்பட்டது.
தலைமையிடம் வழங்கப்பட்டுள்ள மேலதிக ஆணையுடன், கட்சி எந்த நேரத்திலும் விலகலாம் என்று அம்னோ தலைவர் அஹ்மத் ஜாஹித் ஹமிடி கூறினார்.
இது முடிவு செய்யப்படும்போது, அமைச்சர்கள், துணை அமைச்சர்கள் என நியமிக்கப்பட்ட அனைத்து எம்.பி.க்களும், அரசாங்கத்துடன் இணைக்கப்பட்ட நிறுவனங்களின் (ஜி.எல்.சி) தலைவர்களும் இராஜினாமா செய்வார்கள் என்றார் அவர்.
பின்னர், அஹ்மத் ஜாஹித் ஹமிடி அனைத்து பிரதிநிதிகளையும் எழுந்து நின்று அத்தீர்மானத்திற்கு ஆதரவளிக்குமாறு கேட்டுக்கொண்டார்.
அதன்பிறகு, அம்னோ 2020 மாநாட்டின் ஒத்திவைப்பு உரையை அஹ்மத் ஜாஹித் வழங்கினார்.
இதற்கிடையில், அம்னோ துணைத் தலைவர் மொஹமட் ஹசான், அவசரகால அமலாக்கம் முடிவடையும் என எதிர்பார்க்கப்படும் ஆகஸ்ட் மாதத்திலிருந்து அவர்கள் விலகுவதாக சூசகமாகத் தெரிவித்தனர்.
பி.என். மற்றும் பெர்சத்துவுடனான ஒத்துழைப்பு பிரச்சினையைத் தொட்டு கூறுகையில், அம்னோவைத் தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும், மேலும் அவர்கள் சொல்லும் அனைத்திலும் கவனம் கொள்ள வேண்டும் என்றார் முஹமட்.
“மிக முக்கியமான விஷயம் […] என்னவென்றால், பொதுத் தேர்தலில் (ஜி.இ), மக்களிடமிருந்து கருணையை எதிர்பார்க்காமல் அம்னோ வெற்றி பெற வேண்டும், ஓர் அரசாங்கத்தை உருவாக்க வேண்டும்.
“உங்கள் சொந்த பலத்தை வளர்த்துக் கொள்ளுங்கள், உங்கள் சொந்த கால்களில் நில்லுங்கள்… 15-வது ஜி.இ.யை எதிர்கொள்ள கட்சியைப் பலப்படுத்துங்கள்.
இதற்கிடையில், மாநாடு முடிந்த பின்னர் நடந்த செய்தியாளர் கூட்டத்தில், கட்சி உறுப்பினர்கள் அனைவரும் ஆண்டு பொதுக் கூட்டத்தில் எடுத்த முடிவுகளுக்கு முழுமையாக இணங்க வேண்டும் என்றார் அஹ்மத் ஜாஹித்.