எச்.எஸ்.ஆர். : மலேசியா சிங்கப்பூருக்கு RM320 மில்லியன் இழப்பீடு அளிக்கிறது

அதிவேக இரயில் (எச்.எஸ்.ஆர்.) திட்ட மேம்பாடு மற்றும் அதன் ஒத்திவைப்பு நீட்டிப்பு தொடர்பாக ஏற்படும் செலவுகளுக்காக, மலேசியா SG$102.8 மில்லியன் (RM320.27 மில்லியன்) இழப்பீட்டைச் சிங்கப்பூருக்குச் செலுத்தியுள்ளது.

மலேசிய அரசாங்கம் நடத்திய சரிபார்ப்பு செயல்முறையைத் தொடர்ந்து, இரு நாடுகளும் இந்தத் தொகைக்கு ஓர் உடன்பாட்டை எட்டியுள்ளன.

2020 டிசம்பர் 31 அன்று, எச்.எஸ்.ஆர். திட்டத்திற்கான இருதரப்பு ஒப்பந்தத்தை இரத்து செய்வது தொடர்பான முழு மற்றும் இறுதி தீர்வையும் இந்தத் தொகை பிரதிபலிக்கிறது என்று மலேசியப் பிரதமர் துறை (பொருளாதாரம்) அமைச்சரும் சிங்கப்பூரின் போக்குவரத்து அமைச்சரும் திங்களன்று வெளியிட்ட கூட்டு அறிக்கையில் தெரிவித்துள்ளனர். .

அந்த அறிக்கையின்படி, மலேசியாவும் சிங்கப்பூரும் நல்ல உறவுகளைப் பேணுவதற்கும், அந்தந்த மக்களின் பொது நலனுக்காக நெருக்கமாகப் பணியாற்றுவதற்கும் உறுதியுடன் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தின.

  • பெர்னாமா