பெர்சத்து-பாஸ் ஒத்துழைப்பு தொடரும், ஜிஇ-க்குப் பிறகு ‘புதிய சீரமைப்பு’ நிராகரிக்கப்பட்டது

15-வது பொதுத் தேர்தலை (ஜிஇ) எதிர்கொள்ள, தேசியக் கூட்டணியில் தங்கள் ஒத்துழைப்பு தொடரும் என்பதைப் பெர்சத்து மற்றும் பாஸ் கட்சிகள் இன்று மீண்டும் உறுதிப்படுத்தின.

அந்த இரண்டு மலாய் கட்சிகளும், அதன் பின்னர் அரசாங்கத்தை அமைப்பதற்கான எந்தவொரு புதிய சீரமைப்பும் இருக்காது என்றும் கூறின. குறிப்பாக, பக்காத்தான் ஹராப்பான் (பி.எச்.) மற்றும் அதன் நட்பு கட்சிகளுடன்.

இத்தகவலை அதன் பொதுச் செயலாளர்களான ஹம்சா ஜைனுடினும் (பெர்சத்து) தக்கியுட்டின் ஹசானும் இன்று வெளியிட்ட ஒரு கூட்டு அறிக்கையில் தெரிவித்தனர்.