‘பாலியல் துன்புறுத்தல் மசோதாவைத் துரிதப்படுத்துங்கள்’ – மகளிர் தன்னார்வத் தொண்டு நிறுவனம்

பெண்கள் உரிமைக் குழுவான, அனைத்து மகளிர் நடவடிக்கை குழு (ஆவாம்) பாலியல் துன்புறுத்தல் தொடர்பான மசோதாவை (ஆர்.யு.யு.) உடனடியாக முன்வைக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தியது.

முன்னதாக, இந்த மசோதா கடந்த மாத இறுதிக்குள் நிறைவடையும் என்று மகளிர், குடும்ப மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சு எதிர்பார்த்தது, ஆனால் இதுவரை அதன் நிலை இன்னும் அறியப்படவில்லை.

ஆவாம்-இன், பொதுத் தகவல் அதிகாரி தான் சியா ஈ, கடந்த ஆண்டு பாலியல் துன்புறுத்தல் வழக்குகள் கணிசமாக (893.8 விழுக்காடு) அதிகரித்ததால் இந்த மசோதாவை விரைவுபடுத்த வேண்டும் என்றார்.

“தொற்றுநோய் காலகட்டத்தில் அதிகமான மக்கள் இணையத்தில் உலாவினர், அதன்போது இணையவழி துன்புறுத்தல் வழக்குகளும் அதிகரித்தன,” என்று அவர் கூறினார்.

2019-ஆம் ஆண்டில் 16 வழக்குகள் மட்டுமே பதிவான நிலையில், 2020-ல் மொத்தம் 159 பாலியல் துன்புறுத்தல் வழக்குகளை ஆவாம் பெற்றுள்ளது.