ம.இ.கா. துணைத் தலைவர் எம் சரவணன், பெர்சத்து மற்றும் தேசியக் கூட்டணி உடனான ஒத்துழைப்பைத் தொடரலாமா அல்லது முடிவுக்குக் கொண்டுவரலாமா என்பது பற்றி கட்சி இன்னும் முடிவு செய்யவில்லை என்றார்.
இருப்பினும், அம்னோவைப் பின்பற்றி, பெர்சத்துவுடனான உறவைத் துண்டிக்க ம.இ.கா. முடிவு செய்தால், அடுத்தப் பொதுத் தேர்தலில் (ஜி.இ) சிரமங்களை எதிர்கொள்ள கட்சி தயாராக இருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
ஏனென்றால், ம.இ.கா.வுக்கு இதுவரை ஜிஇ-ல் எதிர்க்கட்சியாகப் போட்டியிட்ட அனுபவம் ஏதும் இல்லை என்று அவர் கூறினார்.
“இந்த முடிவு மிகவும் முக்கியமானது, ஏனென்றால் நாங்கள் எதிர்தரப்பில் இருப்போம், மேலும் மண்டபத்திற்குள்ளானப் பிரச்சாரத்திற்கு அணுகல் இருக்காது.
“உண்மையில், ம.இ.கா.வுக்கு எதிர்க்கட்சியாகப் போட்டியிடுவதில் எந்த அனுபவமும் இல்லை,” என்று அவர் இன்று கிள்ளானில் உள்ள ஒரு தங்கும் விடுதியில், ம.இ.கா. தேசிய இளைஞர் மற்றும் ம.இ.கா. புத்ரி ஆண்டு மாநாட்டைத் தொடக்கி வைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.