ம.இ.கா. இளைஞர் : கல்வி நிறுவனங்களில் இந்திய மாணவர்களின் சேர்க்கை அதிகரிக்க வேண்டும்

தகுதியான இந்திய மாணவர்களைக், குறிப்பாக பி40 குழுவினரைப் பொது பல்கலைக்கழகங்கள், பாலிடெக்னிக்ஸ், தொழில்நுட்ப மற்றும் தொழிற்பயிற்சி கல்லூரிகள், மெட்ரிகுலேஷன் கல்லூரிகள், முழு விடுதிப் பள்ளிகள் மற்றும் மாரா அறிவியல் கல்லூரி போன்றவற்றில் அதிகமாக சேரச் செய்வது, ம.இ.கா. இளைஞர் பிரிவினரின் 33-வது பொது மாநாட்டின் நான்கு தீர்மானங்களில் ஒன்றாகும்.

ம.இ.கா. இளைஞர் பிரிவு நேற்று ஓர் அறிக்கையில், இந்தப் பிரச்சினைகள் நீண்ட காலமாக அவர்களால் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், பாரிசான் நேஷனல் தற்போதைய அரசாங்கத்தின் ஓர் அங்கமாக இருப்பதால், கல்வி அமைச்சுடன் கலந்துபேசி, முழுமையான ஒரு தீர்வை உருவாக்க வேண்டும். இதன்வழி தகுதிவாய்ந்த இந்திய மாணவர்கள் அவர்களின் படிப்பை மேற்கொள்வதற்கான வாய்ப்பும் பொருத்தமான இடமும் வழங்கப்பட வேண்டும்.

கல்வி தொடர்பான பிரச்சினை ம.இ.கா. இளைஞர் பிரிவின் நான்கு தீர்மானங்களில் ஒன்றாகும், மற்ற தீர்மானங்கள் தொழில்முனைவோர், வேலை வாய்ப்புகள் மற்றும் 15-வது பொதுத் தேர்தல் (ஜிஇ15) ஆகியவற்றுடன் தொடர்புடையவை, அவை அனைத்தையும் அதன் உறுப்பினர்கள் ஒருமனதாக ஏற்றுக் கொண்டனர்.

(தொழில் முனைவோர் அடிப்படையில்), பாதிக்கப்பட்ட இந்திய இளைஞர்களுக்கு (கோவிட்-19 தொற்றால்), தொழில் முனைவோர், நிதி மேலாண்மை மற்றும் டிஜிட்டல் மார்க்கெட்டிங் தொடர்பான பயிலரங்குகள் மற்றும் பயிற்சி அளிக்க சிறப்பு நிதி வழங்கப்பட வேண்டும். இதனால் தற்போதைய தேவைகளுக்குப் பொருத்தமான சிறு வணிகங்களை அல்லது சேவைகளை அவர்கள் தொடங்கலாம்,” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலை வாய்ப்புகள் குறித்து, தகுதியுள்ள இந்திய இளைஞர்களுக்கு, நாட்டின் பொருளாதார அமைப்பில் ஆரோக்கியமாகப் போட்டியிட நியாயமான, பொருத்தமான வாய்ப்புகளும் இடமும் வழங்கப்படும் என்று நம்புவதாக ம.இ.கா. இளைஞர் பிரிவு தெரிவித்துள்ளது.

ஜிஇ15 ஐப் பொறுத்தவரை, தகுதிவாய்ந்த இளைஞர் பிரதிநிதிகளை நியமிக்க கட்சி மிகவும் வெளிப்படையாக இருக்க வேண்டும், இந்திய சமூகத்தின் பிரச்சினைகளை அடிமட்ட அளவில் தீர்ப்பதில் தீவிரமாகச் செயல்பட, கடினமாக உழைக்க வேண்டும் என்று அவர்கள் கருதுகிறார்கள்.

மற்றொரு அறிக்கையில், ம.இ.கா. மகளிர் பிரிவு, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு மன அழுத்தம் மற்றும் மனச்சோர்வு காரணமாக ஏற்படும் தற்கொலைகளுக்குத் தீர்வுகாண, உறுதியான, பயனுள்ள கொள்கைகளை வகுக்க வேண்டுமென, மகளிர் மற்றும் குடும்ப மேம்பாட்டு அமைச்சிற்கு அழைப்பு விடுப்பது உட்பட ஐந்து தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளது.

தவிர, மத்திய அரசியலமைப்பில் குறிப்பிட்டுள்ளதைப் போல, மலேசியாவில் தாய்மொழிப் பள்ளிகளைத் தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் விரும்புகிறார்கள்.

ம.இ.கா. தேசியத் தலைவர் விக்னேஸ்வரன் மற்றும் ம.இ.கா. மகளிர் தலைவர் உஷா நந்தினி ஜெயராம் இருவருக்கும் ம.இ.கா. மகளிர் தங்களின் தெளிவான ஆதரவை வெளிப்படுத்தினர்.

  • பெர்னாமா