முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகமது, டி.ஏ.பி-யுடன் அம்னோ உறவுகளை உருவாக்க முடியும் என்பதனை நிராகரிக்கவில்லை, கட்சி இவ்வளவு காலமாக ம.சீ.ச். உடன் இணைந்து செயல்பட்டு வருகிறது.
தேசிய முன்னணியில் அம்னோவுடன் இருக்கும் ம.சீ.ச.-வும் கடந்த காலங்களில் “தீவிரமானதாக” காணப்பட்டதாக அவர் கூறினார்.
“இது அம்னோவைப் பொறுத்தது.
“அம்னோ, ம.சீ.ச. மற்றும் ம.இ.கா. உடன் ஒரு தீவிரக் கட்டத்தில்தான் பணியாற்றி வருகிறது,” என்று அவர் நேற்று அம்பாங்கில், செய்தியாளர்களைச் சந்தித்தபோது கூறினார்.
ஃபிரி மலேசியா டூடே கூற்றின்படி, தாஜுட்டின், இரு கட்சிகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பின் சிரமத்தைக் குறிப்பிட்டுள்ளார், அதற்கு காரணம் மலாய்க்காரர்களிடையே டிஏபி மீதான எண்ணம்.
பி.எச்.யில் டிஏபி-உடன் பணிபுரிந்த அனுபவம் குறித்து மேலும் கருத்து தெரிவித்த மகாதீர், மலேசியா ஒரு பன்முக நாடு என்பதைக் கட்சி உணர வேண்டும் என்றார்.
“நான் டிஏபி-உடன் பணிபுரிந்திருக்கிறேன், கட்சி சில சமயங்களீல் தீவிர போக்குடன் இருந்தது, ஆனால் நம்மால் அவர்களுடன் ஒத்துழைக்க முடியும்.
“(மலேசியா) ஒரு பன்முக நாடு, உங்கள் சொந்த இனத்திற்காக மட்டும் நீங்கள் பணியாற்ற முடியாது என்பதை டிஏபியும் உணர வேண்டும்,” என்று அவர் மேலும் கூறினார்.
பதிவைப் பொறுத்தவரை, கட்சியின் போராட்டம் அனைத்து மலேசியர்களுக்குமானது, இனத்தை அடிப்படையாகக் கொண்டதல்ல என்று டிஏபி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
மற்றவற்றுடன், கட்சி இனப்பாகுபாடு இல்லாமல், அதன் உறுப்பினர்கள் எண்ணிக்கையை உயர்த்தி வருகிறது.
கடந்த ஆண்டு பிற்பகுதியில், அஹ்மத் பைசல் அசுமுவை மந்திரி பெசார் பதவியில் இருந்து நீக்கியதைத் தொடர்ந்து, பேராக்கில் அரசியல் மோதல்களுக்கு மத்தியில் அம்னோவிற்கும் டிஏபிக்கும் இடையிலான ஒத்துழைப்பு பற்றிய ஊகங்கள் எழுந்தன.
15-வது பொதுத் தேர்தலில், பெர்சத்துவுடன் இனி ஒத்துழைப்பு இல்லை என அம்னோ முடிவு செய்ததையடுத்து, தேசியக் கூட்டணி மற்றும் முவாஃபாக்கட் நேஷனல் இடையேயான உறவில் ஏற்பட்ட பிளவு குறித்து கேட்டதற்கு, மகாதீர் அரசியலில் இதுபோன்ற விஷயங்கள் பொதுவானவை என்றார்.
“மலேசியாவில் அதிகமான கட்சிகள் உள்ளன, ஒவ்வொரு கட்சியிலும் பிளவுபடும் பிரச்சினைகள் உள்ளன,” என்று அவர் கூறினார்.