இன்று இரவு நடைபெறவிருந்த கூட்டம் குறித்து, தங்களுக்கு அறிவிப்பு வரவில்லை என்று தேசிய முன்னணி (பிஎன்) உறுப்புக் கட்சிகள் கூறியதை அடுத்து, பிஎன் உச்சமன்றக் கூட்டத்தை இரத்து செய்ததாக கூறப்படுகிறது என்று அம்னோ வட்டாரம் ஒன்று தெரிவித்துள்ளது.
“கூட்ட அறிவிப்பு கிடைக்கவில்லை என்று பிஎன் உறுப்புக் கட்சிகள் கூறியதால் கூட்டம் இரத்து செய்யப்பட்டது.
“இது மிகவும் அதிர்ச்சியூட்டும் மற்றும் அபத்தமான தகவல், ஏனென்றால் இந்த விஷயத்தில் பிஎன் மிகவும் திறமையானது,” என்று அவர் சற்று முன்னர் தொடர்பு கொண்டபோது அவர் கூறினார்.
நேற்றிரவு நடைபெறவிருந்த கூட்டத்தில் மசீச, ம.இ.கா. மற்றும் பார்ட்டி பெர்சத்து ரக்யாட் சபா (பிபிஆர்எஸ்) ஆகியன கலந்துகொள்வார்கள் என்று கூறப்பட்டது.
முன்னதாக, ஆஸ்ட்ரோ அவானி நேற்று இரவு நடக்கவிருந்த பிஎன் கூட்டம் விளக்கம் இல்லாமல் இரத்து செய்யப்பட்டதாக அறிவித்தது.
அம்னோ – பெர்சத்து இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டு, பிளவுபடுவதற்காகக் காத்திருப்பதாகக் கூறப்படுகிறது.
அம்னோவின் ஒரு பகுதி, அதன் தலைவர் அஹ்மத் ஜாஹித் ஹமிடி தலைமையில், பெர்சத்துவுடனான உறவுகளைத் துண்டிக்க விரும்புகிறது, அதே நேரத்தில், சில கட்சித் தலைவர்கள் – தேசியக் கூட்டணி அரசாங்கத்தில் அமைச்சரவைப் பதவிகளை வகிக்கும் பெரும்பான்மையானவர்கள் – தேசியக் கூட்டணியில், பெர்சத்துவுடன் இருக்க விரும்புவதாகக் கருதப்படுகிறது.
ஏப்ரல் 3-ம் தேதி, கட்சியின் பொதுக் கூட்டத்தின் போது, ம.இ.கா. முஹைதீன் மற்றும் தேசியக் கூட்டணிக்கு ஆதரவாக இருக்கும் என்பதைத் தெளிவுபடுத்தியது.
எவ்வாறாயினும், கட்சி தேசிய முன்னணிக்கு விசுவாசமாக இருக்கும் என்றும், அம்னோவின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி பெர்சத்துவுடனான உறவுகளைத் துண்டிக்கலாமா என்பதை கூட்டணி முடிவு செய்யும் என்றும் கூறியது.