தெராத்தாய் சட்டமன்ற உறுப்பினர், டிஏபி-ஐ விட்டு வெளியேறினார்

தெராத்தாய் சட்டமன்ற உறுப்பினர், பிரையன் லாய் வாய் சோங், டிஏபியை விட்டு வெளியேறி, பி.எச்.-ஐ ஆதரிக்கும் ஒரு சுயேட்சை மக்கள் பிரதிநிதியாக மாறவுள்ளதாக அறிவித்தார்.

இது, அவருக்கு ‘அந்தரங்க உறவு’ இருப்பதாக வெளியான குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டிருக்கும் தருணத்தில் நடந்துள்ளது.

இன்று ஓர் அறிக்கையில், டிஏபி இந்த விஷயத்தில் சிக்கிக் கொள்ளக்கூடாது என்பதற்காக, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று லாய் கூறினார்.

“எனது தனிப்பட்ட பிரச்சினைகள் காரணமாக, நான் விரும்பும் கட்சியின் பெயர் பாதிக்கப்படுவதை நான் விரும்பவில்லை.

“சில பரிசீலனைகளுக்குப் பிறகு, எனது தொகுதியில் பணியாற்ற டிஏபி-யை விட்டு வெளியேறி, டிஏபி மற்றும் பி.எச். சார்புடைய சுயேட்சை சட்டமன்ற உறுப்பினராக மாற முடிவு செய்தேன்,” என்று அவர் கூறினார்.

கடந்த வாரம், சிலாங்கூர் டிஏபி செயலாளர் பதவியை இராஜினாமா செய்த பிறகும், தனக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தொடர்பாக, டிஏபி தொடர்ச்சியான “தாக்குதல்களை” பெற்று வருவதால், இந்த முடிவை எடுத்ததாக லாய் கூறினார்.

“இந்த விஷயத்தால், கட்சிக்கு ஏற்பட்ட தாக்கத்திற்கு மீண்டும் ஒரு முறை நான் மன்னிப்பு கேட்க விரும்புகிறேன்,” என்று அவர் மேலும் கூறினார்.

பி.எச். கூட்டணியின் பெரும்பான்மை கொண்ட சிலாங்கூர் அரசாங்கத்தை, லாயின் முடிவு பாதிக்கவில்லை.