‘ஜோ லோ’வின் சொகுசு கப்பல் பறிமுதல்’ அனுபவம் – வழக்கறிஞர் புத்தகம் எழுதுகிறார்

1எம்.டி.பி.-யுடன் தொடர்புள்ள ஆடம்பரக் கப்பலான ஈக்குவானிமிட்டியைக் ‘கைப்பற்ற’, மலேசியச் சட்டக் குழுவை வழிநடத்திய வழக்கறிஞர், இந்த வழக்கில் தனது அனுபவத்தைப் பற்றி ஒரு புத்தகத்தை எழுதுகிறார்.

சித்பா செல்வரத்னம், “சொகுசுக்கப்பல் ஈக்குவானிமிட்டி பறிமுதல் : மலேசியா அவளுடையதை எப்படி மீட்டெடுத்தது” (“Arrest of The Superyacht Equanimity: How Malaysia Reclaimed What Was Hers” ) என்ற தலைப்பிலான அப்புத்தகம், சுருக்கமான, ஆனால் ஆழமான வாசிப்பு என்றார்.

1எம்.டி.பி.-இலிருந்து முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் நிதியைப் பயன்படுத்தி, 250 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு, ஜோ லோவை வேட்டையாடுவதில் ஒரு தொழிலதிபர் வாங்கிய ஆடம்பரக் கப்பல்தான் ஈக்குவானிமிட்டி.

இந்த ஆடம்பரக் கப்பலை இந்தோனேசிய அதிகாரிகள் 2018 பிப்ரவரியில் பறிமுதல் செய்து, அதே ஆண்டின் ஆகஸ்டில் மலேசியாவிடம் ஒப்படைத்தனர், பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கம், நாட்டின் நிர்வாகத்தை ஏற்றுக்கொண்ட மூன்று மாதங்களுக்குப் பிறகு.

“ஈக்குவானிமிட்டி மிகவும் பிரபலமானது. இது மிகவும் சிறந்தது, ஆனால் கைப்பற்றுவது கடினம்.

“ஜோ லோ கப்பலைப் பற்றி ஒரு மர்மத்தைத் தூண்டிவிட்டார், குறிப்பாக வெளிநாட்டு பிரபலங்களுடன் ஜோ லோவின் ஆடம்பர விருந்து பற்றி பேசப்பட்டபோது,” என்று அப்புத்தகத்தில் மேற்கோள் கூறப்பட்டுள்ளது.

போர்ட் கிள்ளானைக், கப்பல் முதன்முதலில் வந்தடைந்தபோது சித்பா அந்த இடத்தில் இருந்தார்.

கப்பலைக் கைப்பற்றுவது முதல், சட்டக் குழுவினர் அக்கப்பலை வெற்றிகரமாக விற்பனை செய்வது வரை இந்தப் புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது என்றார் அவர்.

“இது எனது எல்லா அனுபவங்களையும், நாங்கள் எதிர்கொண்ட கொந்தளிப்பான உணர்ச்சிகளையும், நாங்கள் சமாளிக்க வேண்டிய சவால்களையும் விதைத்த கதை.

ஆண் ஆதிக்கம் செலுத்தும் தொழிலில் ஓர் அணியை வழிநடத்தும் ஒரு பெண் என்ற முறையில் தனது அனுபவத்தையும் இந்தப் புத்தகம் விவரிக்கிறது என்று சித்பா மலேசியாகினியிடம் கூறினார்.

கூடுதலாக, ஆடம்பரக் கப்பல்களை எவ்வாறு பறிமுதல் செய்வது, நிர்வகிப்பது மற்றும் விற்பது என்பதை அறிய விரும்பும் கடல்சார் வழக்கறிஞர்களுக்கு இந்தப் புத்தகம் ஓர் ஆதாரமாக இருக்கும் என்றும் அவர் நம்பிக்கைத் தெரிவித்தார்.

“ஒரு கப்பலுக்கு, ஒருவர் இவ்வளவு பணம் செலுத்துவது எளிதானதல்ல,” என்று அவர் கூறினார்.

சித்பா வலைத்தளம் அல்லது முகநூல் பக்கத்தில் (Facebook Sitpah) RM88-க்குப் புத்தகத்தை முன்கூட்டியே ஆர்டர் செய்யலாம்.

இந்தப் புத்தகம் வெளியிடப்பட்ட பிறகு RM108 விலையில் விற்கப்படும்.

சித்பா இந்தப் புத்தகத்தைச் சுயமாக வெளியிட்டதாகவும், விற்பனையிலிருந்து கிடைக்கும் வருமானங்கள் அனைத்தும் தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடையாக வழங்கப்படும் என்றும் கூறினார்.

“என்னிடம் 22 தொண்டு நிறுவனங்கள் உள்ளன – எனவே, புத்தக விற்பனையின் முன்னேற்றத்தின் அடிப்படையில் அவற்றை நன்கொடையாக வழங்குவேன்,” என்று அவர் கூறினார்.

மே 5-ஆம் தேதி, நாட்டின் முன்னாள் தலைமை நீதிபதி துன் ஸாக்கி அஸ்மி, இந்தப் புத்தகம் குறித்த விவாதக் கருத்தரங்கில் கலந்துகொள்ளவுள்ளார்.

ஈக்குவானிமிட்டி இப்போது கெந்திங் குழுமத்திற்குச் சொந்தமானது, 126 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புகொண்ட இந்த ஆடம்பரக் கப்பலுக்கு, இப்போது ‘திரான்குய்லிட்டி’ (Tranquility-அமைதி) என்று பெயரிடப்பட்டுள்ளது.