வழக்குரைஞர் : நஜிப்பைப் பொறுப்பேற்க வைப்பதில் நீதிபதி ஆர்வமாக இருக்கிறார்

எஸ்.ஆர்.சி. இன்டர்நேஷனலின் RM42 மில்லியன் நிதி சம்பந்தப்பட்ட ஊழல் வழக்கு விசாரணை நீதிபதி, நஜிப் ரசாக்கை விசாரிப்பதில் ஆர்வமுடன் இருப்பதாகக் கூறிய வழக்கறிஞர்களின் வாதங்களை மேல்முறையீட்டு நீதிமன்றம் இன்று கேட்டது.

முன்னாள் பிரதமரின் தண்டனை மற்றும் குற்றவியல் தீர்ப்பை இரத்து செய்ய வேண்டும் என்று மேல்முறையீட்டு விசாரணையின் போது நஜிப்பின் வழக்கறிஞர் ஃபர்ஹான் ரீட் வாதிட்டார்.

“குற்றம் சாட்டப்பட்டவரைப் பொறுப்புக்கூற வைக்க விருப்பம் இருப்பதாகத் தெரிகிறது,  நீதிபதி தூண்டப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

வழக்குரைஞர் ஃபர்ஹான் ரீட்

“குற்றவியல் சட்டம் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்குப் பொறுப்புக்கூற சரியான பாதை அல்ல, ஏனெனில் 14-வது பொதுத் தேர்தலின் போது (ஜி.இ) குற்றம் சாட்டப்பட்டவர் பொறுப்புக்கூறப்பட்டார்,” என்று ஃபர்ஹான் மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி அப்துல் கரீம் அப்துல் ஜலீல் தலைமையிலான மூன்று நீதிபதிகள் குழு முன் வாதிட்டார். .

இந்த குழுவில் மேலும் இரண்டு மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள், வஸீர் அலாம் மைடின் மீரா மற்றும் ஹஸ் ஸானா மேஹாட் ஆகியோர் இருந்தனர்.

முன்னதாக, பெக்கன் எம்.பி.யின் முழு தீர்ப்பில் உயர் நீதிமன்றம் கூடுதல் வாதங்களை சேர்த்துள்ளதாகத் தெரிகிறது என்று நஜிப்பின் சட்டக் குழு தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு ஜூலை 28-ஆம் தேதி, கோலாலம்பூர் உயர்நீதிமன்றம், ஓர் அதிகாரத் துஷ்பிரயோகம், மூன்று நம்பிக்கை மீறல் மற்றும் எஸ்.ஆர்.சி.யின் RM42 மில்லியன் நிதி தொடர்பான மூன்று பண மோசடி குற்றச்சாட்டுகளில் நஜிப் குற்றவாளி எனக் கண்டறிந்தது.

நீதிபதி மொஹமட் நஸ்லான் மொஹமட் கசாலி, நஜிப்புக்கு 12 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், RM210 மில்லியன் தண்டமும் விதித்தார்.

இருப்பினும், மேல்முறையீடு நிலுவையில் உள்ளதால், தண்டனையை நிறைவேற்றுவதை நிறுத்த நஜிப்பின் வழகுரைஞர் குழுவின் விண்ணப்பத்தை உயர் நீதிமன்றம் அனுமதித்தது.

எஸ்.ஆர்.சி. 1எம்.டி.பி.யின் முன்னாள் துணை நிறுவனமாகும். அப்போது இந்த நிறுவனம் முழுக்க முழுக்க நிதியமைச்சருக்குச் சொந்தமானது.

அந்த நேரத்தில் பிரதமராக இருந்ததைத் தவிர, நஜிப் நிதியமைச்சர், எஸ்.ஆர்.சி.யின் ஆலோசகர் மற்றும் 1எம்.டி.பியின் ஆலோசனைக் குழுவின் தலைவராகவும் இருந்தார்.