லியு : சர்ச்சைக்குப் பதிலளிப்பது, ‘டிஏபியின் சீனத்தை நீர்த்துப்போகச் செய்யாது’

மலாய்க்காரர்களின் ஆதரவைப் பெறுவதற்காக, டிஏபி “சீனத்தை நீர்த்துப்போகச் செய்யாது” என்ற டிஏபி சிலாங்கூர் சட்டமன்ற உறுப்பினர் ரோனி லியு-இன் சர்ச்சைக்குரிய அறிக்கையைத் தொடர்ந்து, அவரது சக நண்பர்கள் டோனி புவா மற்றும் ஹன்னா இயோவின் விமர்சனங்களை லியு நிராகரித்தார்.

ஞாயிற்றுக்கிழமை, கிள்ளானில் டிஏபி மூத்தத் தலைவர் லீயு ஆ கிம் புத்தக வெளியீட்டு விழாவில், புவா மற்றும் இயோ இருவரும் தனது அறிக்கையைத் தவறாகப் புரிந்து கொண்டதாக லியு கூறினார்.

“எனது அசல் பேச்சு மேண்டரின் மொழியில் உள்ளது.

“இயோவும் புவாவும் சுயமாகப் புரிந்துகொண்டு, எனக்கு எதிராக பாரபட்சம் காட்டி என்னைத் தாக்கத் தொடங்கியுள்ளனர்,” என்று அவர் கூறினார்.

உரையின் மொழிபெயர்ப்பு பின்வருமாறு :

“டிஏபி ஒரு பல்லினக் கட்சி. இந்தக் கட்சி நமது அரசியல் எதிரிகளால் வீசப்படும் விமர்சனங்களுக்காக மட்டும், அதன் சீனத் தன்மையை நீர்த்துப்போகச் செய்யத் தேவையில்லை.

“கட்சியின் கலாச்சாரத்தையும், கட்சி அரசியலமைப்பின் கொள்கைகளையும், பன்முகத்தன்மை மற்றும் ஜனநாயக அரசியல் போராட்டத்தையும் நாம் பாதுகாக்க வேண்டும்.

“டிஏபி அனைத்து மலேசியர்களுக்குமானது, நாம் மற்ற மலாய் கட்சிகளுடன் இணைந்து பணியாற்ற வேண்டும், அதெசமயம் சீனர் கட்சி அல்ல என்று நம்மை நாமே இழிவுபடுத்தவோ அல்லது விவரிக்கவோ கூடாது.

“இந்த அணுகுமுறையால், மலாய்க்காரர்களின் ஆதரவு உங்களுக்குக் கிடைக்காது.”