செல்கோம்-டிஜி இணைப்பை நிறுத்துமாறு எம்.பி. கோரிக்கை

டிஜி மற்றும் செல்கோம் இடையேயான இணைப்பை நிறுத்துமாறு, எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் அரசாங்கத்தை வலியுறுத்தினார், இந்த நடவடிக்கை நுகர்வோரைப் பாதிக்கும் என்று அவர் கூறினார்.

ஸ்தம்பின் நாடாளுமன்ற உறுப்பினர், சோங் சியாங் ஜென், வங்காள தேசத்தில் உள்ள இரண்டு துணை நிறுவனங்கள் இணைவதைப் போட்டி எதிர்ப்புச் சட்டங்கள் காரணமாக செய்ய முடியாது என்று ஆக்ஸியாதா குழுமம் (Axiata Group Bhd) ஒப்புக்கொண்டதைப் போல, மலேசியாவிலும் கடைப்பிடிக்க வேண்டும் என்றார்.

சோங் சியாங் ஜென்

“வங்காள தேசம் போன்ற ஒரு நாடு அதன் நுகர்வோரின் நலன்களைப் பாதுகாப்பதற்காக இதுபோன்ற இணைப்புகளைத் தடைசெய்ய ஒரு சட்டத்தைக் கொண்டிருக்கும் போது, நம் நாட்டில் நுகர்வோரின் உரிமைகளையும் நலன்களையும் பாதுகாப்பதில் மலேசியாவை நாம் பின்னுக்குத் தள்ள முடியாது,” என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

முன்னாள் உள்நாட்டு வர்த்தக மற்றும் நுகர்வோர் விவகார அமைச்சரான சோங், இந்த இணைப்பு நாட்டின் தொலைதொடர்பு வாடிக்கையாளர்களில் 50 விழுக்காட்டிற்கும் அதிகமானவர்களைக் கட்டுப்படுத்த காரணமாக அமைகிறது, இது நுகர்வோருக்கான தேர்வைக் குறைக்கும்.

இது தொடர்பாக, மலேசியத் தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் (எம்.சி.எம்.சி) இணைப்பதைத் தடுக்க தகவல் தொடர்பு மற்றும் பல்லூடகச் சட்டத்தின் (1998) பிரிவு 133-ஐப் பயன்படுத்த வேண்டும் என்று சோங் கூறினார்.

டிஜி’யின் பெரும்பான்மையான பங்கு, நோர்வே அரசாங்கத்தின் புகழ்பெற்ற டெலினோருக்குச் (Telenor) சொந்தமானது, அதே நேரத்தில் ஆக்ஸியாதா குழுமம் அரசாங்கத்துடன் இணைக்கப்பட்ட நிறுவனமாகும், அதன் மூன்று முக்கியப் பங்குதாரர்களான கஸானா நேஷனல் பெர்ஹாட், பணியாளர் வருங்கால வைப்பு நிதி மற்றும் அமானா சஹாம் பூமிபுத்ரா ஆகியன மொத்தமாக நிறுவனத்தில் 64 விழுக்காடு பங்குகளை வைத்திருக்கிறார்கள்.

ஜோர்கன் சி அரென்ட்ஸ் ரோஸ்ட்ரப்

நேற்று, முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக், இந்த இணைப்பு செல்கோமுடன் ஒப்பிடும்போது, வெளிநாட்டு நிறுவனத்தால் கட்டுப்படுத்தப்படும் டிஜி’க்கு அதிகப் பயனளிக்கும் என்று கூறினார்.

டெலினோர் மற்றும் ஆக்ஸியாதா குழுமம் 2019-இல் இணைப்பு பேச்சுவார்த்தைகளை நாடின, ஆனால் நான்கு மாதங்களுக்குப் பிறகு அது நிறுத்தப்பட்டது.

மலேசியா மற்றும் ஆசியாவில் அந்நிறுவனம் “மிகவும் அர்ப்பணிப்புடன்” இருப்பதாக, டெலினோர் நிர்வாகத் துணைத் தலைவரும் ஆசிய நடவடிக்கைகளின் தலைவருமான ஜோர்கன் சி அரென்ட்ஸ் ரோஸ்ட்ரப் தி எட்ஜ்-இடம் தெரிவித்தார்.

இந்த இணைப்பு மலேசியாவில் ஒரு பெரிய மற்றும் திறமையான நிறுவனத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டது, இது இரு நிறுவனங்களுக்கும் பயனளிக்கும் என்று அவர் சொன்னார்.