பள்ளியை மூடுவதற்கான முடிவு பி.கே.டி., கே.பி.எம். மற்றும் மாநில அரசுடன் இணைந்து எடுக்கப்படும்

கோவிட் -19 நேர்வுகள் அதிகரிப்பைத் தொடர்ந்து, பள்ளி மூடப்படுவது குறித்த முடிவு கல்வி அமைச்சு (கே.பி.எம்.) மற்றும் மாநில அரசுடன் இணைந்து, மாவட்டச் சுகாதார அலுவலகம் (பி.கே.டி.) மேற்கொள்ளும் கூட்டு மதிப்பீட்டின் அடிப்படையில் அமையும் என்று சுகாதார அமைச்சர் டாக்டர் ஆதாம் பாபா தெரிவித்தார்.

கோவிட் -19 தொற்றுக்கு நேர்மறையானதாக உறுதிசெய்யப்பட்ட பின்னர், தனிமைப்படுத்தல் அல்லது வீட்டு கண்காணிப்பு (எச்.எஸ்.ஓ) செய்ய வேண்டியப் பள்ளி ஊழியர்கள் மற்றும் மாணவர்களின் எண்ணிக்கையை இந்த மதிப்பீடு கணக்கில் எடுத்துக்கொள்ளும் டாக்டர் ஆதாம் கூறினார்.

“இருப்பினும், இது மாணவர்களை மட்டும் உள்ளடக்கி, பள்ளி ஊழியர்கள் ஈடுபடவில்லை என்றால், நாம் பள்ளியைத் திறக்க முடியும்,” என்று ‘உங்களைப் பாதுகாக்கவும், அனைவரையும் பாதுகாக்கவும்’ என்ற மலேசியக் கோவிட் -19 தடுப்பூசி பராமரிப்பு திட்டத்தைத் ஜொகூர், தங்காக்-இல் அதிகாரப்பூர்வமாகத் திறந்து வௌத்தபோது கூறினார்.

பள்ளிகளில் கோவிட் -19 நேர்வுகள் அதிகரிப்பால் மூடப்பட வேண்டும் என்று சுகாதார அமைச்சினால் முன்மொழியப்பட்ட பிறப் பள்ளிகள் உள்ளனவா என்று கேட்டபோது அவர் இவ்வாறு கூறினார்.

கிளந்தான் மாநிலத்தில் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணைக்கு உட்பட்ட ஏழு மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளிகளும் கல்வி நிறுவனங்களும், நேற்று முதல் ஏப்ரல் 24 வரை மூடப்பட வேண்டும் என்று மாநிலக் கல்வி இலாகாவின் உத்தரவைத் தொடர்ந்து இக்கேள்வி எழுந்துள்ளது.

இதற்கிடையில், தேசியக் கோவிட் -19 நோய்த்தடுப்பு திட்டத்தின் இரண்டாம் கட்டம் இன்று தொடங்கும் போது, 75 வயது மற்றும் அதற்கும் மேற்பட்ட 9,916 குடியிருப்பாளர்கள் கோவிட் -19 தடுப்பூசி பெற திட்டமிடப்பட்டுள்ளதாக டாக்டர் ஆடாம் தெரிவித்தார்.

அவர்கள் நாடு முழுவதும் உள்ள 30 தடுப்பூசி மையங்களில், அதாவது கெடா, பஹாங் மற்றும் பினாங்கு ஆகிய இடங்களில் தலா ஐந்து, சபாவில் நான்கு, திரெங்கானு மற்றும் மலாக்காவில் தலா மூன்று, நெகிரி செம்பிலானில் இரண்டு மற்றும் பெர்லிஸ், சரவாக் மற்றும் லாபுவானில் இச்சேவையைப் பெறுவார்கள்.

-பெர்னாமா