இன்று 2,078 புதிய நேர்வுகள், 8 மரணங்கள்

கோவிட் 19 | நாட்டில் இன்று நண்பகல் வரையில், 2,078 கோவிட் -19 புதிய நேர்வுகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

முந்தைய வாரங்களுடன் ஒப்பிடும்போது சரவாக் மற்றும் கிளந்தானில் புதிய நேர்வுகளீன் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

சரவாக் மீண்டும் 589 நேர்வுகளுடன், அதிக எண்ணிக்கையிலான புதிய வழக்குகளைக் கொண்ட மாநிலமாக உள்லது.

கிள்ளான் பள்ளத்தாக்கில் மொத்தம் 29.45 விழுக்காடு நோய்த்தொற்றுகள் (612 நேர்வுகள்) பதிவாகியுள்ளன, கிழக்கு மலேசியாவில் 34.65 விழுக்காடு நோய்த்தொற்றுகள் (720 நேர்வுகள்) பதிவாகியுள்ளன.

இன்று தொற்றுநோய்க்கு ஆளானவர்களில் பெரும்பகுதியினர் உள்ளூர்வாசிகள், 1,885 நேர்வுகள் (91.3 விழுக்காடு).

இதற்கிடையில், இன்று 8 மரணங்கள் புகாரளிக்கப்பட்டுள்ளன. இதுவரை இந்நோய்க்கு நாட்டில் 1,386 பேர் பலியாகியுள்ளனர்.

இன்று 1,402 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அவசரப் பிரிவில் 228 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் 93 பேருக்குச் சுவாசக் கருவியின் உதவி தேவைப்படுகிறது.

நாட்டில் இன்று அனைத்து மாநிலங்களிலும் புதியத் தொற்றுகள் பதிவாகியுள்ளன.

மாநிலங்கள் வாரியாகப் புதியத் தொற்றின் எண்ணிக்கை பின்வருமாறு :-

சரவாக் (589), சிலாங்கூர் (457), கிளந்தான் (290), கோலாலம்பூர் (153), சபா (125), ஜொகூர் (115), நெகிரி செம்பிலான் (91), பினாங்கு (91), கெடா (48), பேராக் (43), பஹாங் (32), மலாக்கா (27), திரெங்கானு (8), லாபுவான் (6), புத்ராஜெயா (2), பெர்லிஸ் (1).

இன்று 14 புதியத் திரளைகள் கண்டறியப்பட்டன, 12 திரளைகள் நிறைவுற்றன.