கோவிட் -19 தொற்று கண்ட பள்ளிகள் இரண்டு நாட்களுக்கு மூடப்படும் – துணை அமைச்சர்

கல்வி அமைச்சின் புதிய வழிகாட்டுதலின் கீழ், கோவிட் -19 நேர்வைப் புகாரளிக்கும் பள்ளிகள் இரண்டு நாட்களுக்கு மூடப்படும், ஒரே ஒரு நேர்வு மட்டுமே என்றாலும்.

அதன் அமைச்சர் ராட்ஸி ஜிடின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் இது முடிவு செய்யப்பட்டது என்றும், இந்த உத்தரவு ஏப்ரல் 21 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது என்றும் துணைக் கல்வி அமைச்சர் மா ஹாங் சூன் தெரிவித்தார்.

“நேர்மறையான நேர்வுகளைப் புகாரளிக்கும் பள்ளிகள் இரண்டு நாட்களுக்கு மூடப்படும்.

“பள்ளிகளை முற்றிலுமாக கிருமி நீக்கம் செய்யவும், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இடையே ஓர் உணர்ச்சிகரமான, தேவையற்ற பீதி மற்றும் தவறான புரிதலைத் தடுக்கவும் இது உதவும்,” என்று மா சின் சியு டெய்லிக்குத் தெரிவித்தார்.

மூடப்பட்ட பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள், வீட்டிலிருந்து கற்றல் கற்பித்தலுக்கு மாறுவார்கள் என்றார் அவர்.

பாதிக்கப்பட்ட பள்ளிகளை இரண்டு நாட்களுக்குப் பிறகு மீண்டும் திறக்க முடியுமா, அல்லது அவை மூடப்படுவதை நீட்டிக்க வேண்டுமா என்பதை மாவட்டச் சுகாதார அதிகாரி தீர்மானிப்பார் என்றும் அவர் மேலும் சொன்னார்.

பள்ளிகளில் அதிகமான கோவிட் -19 நேர்வுகள் பதிவாகியதை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

நேற்று பதிவான 11 புதியக் கோவிட் -19 திரளைகளில் இரண்டு பள்ளிகள் சார்ந்தவை.

இரண்டு நாட்களுக்கு முன்பு, சிலாங்கூரின் பெட்டாலிங் மாவட்டத்தில் உள்ள 19 பள்ளிகள் மூட உத்தரவிடப்பட்டன.

இதற்கிடையில், ஏப்ரல் 3 முதல் 16 வரையில், கிளந்தானில் கோவிட் -19 தொற்றுக்கு நேர்மறை சோதனை செய்த 464 நபர்களில், 259 அல்லது 56 விழுக்காட்டினர் இடைநிலைப் பள்ளி மாணவர்கள் ஆவர்.