அவசரக்கால முடிவுக் குழுவை எதிர்கொள்ள அகோங் ஒப்புக்கொண்டார்

இன்று அவசரக்கால முடிவுக் குழுவை எதிர்கொள்ள, யாங் டி-பெர்த்துவான் அகோங் அல்-சுல்தான் அப்துல்லா ரியாதுதீன் அல்-முஸ்தபா பில்லா ஷா அனுமதி தந்தார்.

அச்செயற்குழுவின் நெருங்கிய வட்டாரங்களின்படி, இஸ்தானா நெகராவிடம் இருந்து இன்று காலை ஷா ஆலம் நாடாளுமன்ற உறுப்பினர் காலிட் சமாட்டுக்குக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

இன்றையத் தேதியிட்ட அக்கடிதத்தில், மன்னர் முன் ஆஜராகி, அவர்களின் மனுவைச் சமர்ப்பிக்க அனுமதிப்பதாகக் குறிப்பிடப்பட்டிருதது.

மன்னரை எதிர்கொள்ளும் நிகழ்ச்சிக்கான தேதியும் நேரமும் பின்னர் தீர்மானிக்கப்படும்.

இன்று ஓர் அறிக்கையில், அகோங்கின் அக்கறைக்கும், தங்கள் குழுவைச் சந்திக்க விருப்பம் தெரிவித்தமைக்கும் காலிட் தனது நன்றியைத் தெரிவித்தார்.

“அவசரகாலத்தின் மோசமான விளைவுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது,” என்றார் அவர்.

கடந்த செவ்வாய்க்கிழமை, முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் மொஹமட் மற்றும் அமானா தலைவர் மொஹமட் சாபு ஆகியோருடன், காலிட் இஸ்தானா நெகாராவுக்கு சென்றது குறிப்பிடத்தக்கது.