அகோங்கைச் சந்திக்க ஏற்பாடுகள் : செவ்வாய்க்கிழமை அவசரகால நிறைவு செயற்குழு விவாதிக்கும்

யாங் டி-பெர்த்துவான் அகோங் அல்-சுல்தான் அப்துல்லா ரியாதுதீன் அல்-முஸ்தபா பில்லா ஷாவை எதிர்கொள்ளும் தயாரிப்பில், அவசரகாலப் பிரகடன நிறைவு செயற்குழு எதிர்வரும் செவ்வாய்க்கிழமை விவாதிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன் தலைவர் காலிட் சமாட், அகோங்கை எதிர்கொள்ளப் போகும் தூதுக்குழுவில் யார் யார் இணைவார்கள் என்பது குறித்தும் அதில் விவாதிக்கப்படும் என்றார்.

கூட்டத்தின் சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்து கேட்டதற்கு, அமானாவின் தகவல் தொடர்பு இயக்குநரான காலிட், இஸ்தானா நெகாராவால் குறிப்பிட்ட தேதி எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை என்று மலேசியாகினியிடம் கூறினார்.

“சந்திப்பின் போது, அவசரகாலத்தை முடிவுக்குக் கொண்டுவரும் மனுவை, கையொப்பங்களின் பட்டியலுடன் நாங்கள் சமர்ப்பிப்போம்.

“பரிந்துரைக்கப்பட்ட நடவடிக்கைகள் இந்த செவ்வாய்க்கிழமை இறுதி செய்யப்படும்,” என்று அவர் கூறினார்.

கடந்த ஏப்ரல் 22-ம் தேதி, அக்குழுவைச் சார்ந்த வட்டாரம் ஒன்று, அல்-சுல்தான் அப்துல்லா அவர் முன் ஆஜராக ஒப்புதல் அளித்ததாகவும், ஆனால் தேதி எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை என்றும் கூறியது.

இந்த விஷயத்தைத் தெரிவிக்கும் கடிதம் ஒன்றை, காலிட்டிற்கு இஸ்தானா நெகாரா அனுப்பியதாகவும் அவர் கூறினார்.