பினாங்கில் 20 பள்ளிகள் 2 நாட்களுக்கு மூடப்பட்டன

பினாங்கில், கோவிட்-19 பரவியதன் காரணமாக, 20 பள்ளிகள் இன்று முதல் இரண்டு நாட்களுக்கு மூடப்பட்டுள்ளதாகப் பினாங்கு கல்வித் துறை இயக்குநர் அப்துல் ரஷீத் அப்துல் சமாட் தெரிவித்தார்.

அவற்றுள் இடைநிலைபள்ளிகளும் தொடக்கப் பள்ளிகளும் அடங்கும் என்று கூறிய அவர், விரிவாகக் கூற மறுத்துவிட்டார்.

“சம்பந்தப்பட்ட அனைத்து பள்ளிகளும் துப்புரவு பணிகளுக்காக இரண்டு நாட்களுக்கு மூடப்பட்டன. மேலும் எந்த நடவடிக்கையும் எடுப்பதற்கு முன்பு, பள்ளி மறு மதிப்பீடு செய்யப்படும் (பள்ளி தொடர்ந்து மூடப்படுமா அல்லது திறக்கப்படுமா).

“மூடப்பட்ட பள்ளிகளைச் சார்ந்த மாணவர்களுக்கு, வழக்கம் போல் பள்ளி அட்டவணைப்படி, இல்லமிருந்து கற்பித்தல் மற்றும் கற்றல் (பி.டி.பி.ஆர்) அமர்வுகள் நடைப்புறும்,” என்று பெர்னாமா தொடர்பு கொண்டபோது அவர் கூறினார்.

  • பெர்னாமா