கோவிட் -19 : பள்ளி அமர்வைத் தொடரக் கல்வியமைச்சு உறுதிபூண்டுள்ளது

பள்ளிகளில் கடைப்பிடிக்கப்படும் செந்தர இயங்குதல் நடைமுறைகளால் (எஸ்ஓபி), கோவிட் -19 பரவலைக் கட்டுப்படுத்த முடியும் என்ற நம்பிக்கை உள்ளதால், கல்வி அமைச்சு பள்ளி அமர்வைத் தொடர உறுதிபூண்டுள்ளது என்று கல்வி அமைச்சர் டாக்டர் மொஹமட் ராட்ஸி ஜிடின் தெரிவித்தார்.

இதுவரைப் பெறப்பட்ட தரவுகள், பள்ளி பாதுகாப்பாக இருப்பதையும், பல்வேறு தரப்பினரால் கூறப்பட்ட கோவிட் -19 திரளைகளுக்கானத் தூண்டுதல் இடமல்ல என்பதையும் தெளிவாகக் காட்டுகிறது என்றார்.

மலேசியச் சுகாதார அமைச்சின் சமீபத்தியத் தகவல்கள், 99 கல்வி திரளைகளில், 52 திரளைகள் கல்வி அமைச்சின் கீழ் உள்ள பள்ளிகளில், 2,274 நேர்வுகளுடன் புகாரளிக்கப்பட்டுள்ளன.

“இது முழு திரளைகளில் 4.8 விழுக்காடு அல்லது நேர்வுகளில் 2.07 விழுக்காடு ஆகும்.

“நேர்வுகளில், 1.42 விழுக்காடு அல்லது 1,559 நேர்வுகள் உறைவிடப் பள்ளிகள் சம்பந்தப்படவை. அவற்றுள் 0.53 விழுக்காடு அல்லது 585 நேர்வுகள் மட்டுமே உறைவிடம் அற்ற பள்ளிகள் சம்பந்தப்பட்டவை, இது ஒரு விழுக்காட்டிற்கும் குறைவானது,” என்று புத்ராஜெயாவில் இன்று நடைபெற்ற சிறப்பு செய்தியாளர் கூட்டத்தில் அவர் கூறினார்.

முன்னதாக, சுகாதார அமைச்சின் கூற்றுப்படி, இதுவரை மலேசியாவில் கோவிட் -19 நேர்வுகளில் 60.8 விழுக்காடு அவ்வப்போதைய நேர்வுகள், மீதமுள்ள 39.2 விழுக்காடு திரளைகள் தொடர்புடையவை என்று கண்டறியப்பட்டுள்ளது.

“60.8 விழுக்காட்டினைப் பார்த்தால், இந்தச் சூழலில் குழந்தைகள் எல்லா இடங்களிலும் (கோவிட் -19 தொற்றுக்கு) ஆளாக வாய்ப்புள்ளது, பள்ளி சூழ்நிலைகளில் மாணவர்கள் கட்டுப்படுத்தப்பட்ட நிலையில் இருக்கிறார்கள், ஏனெனில் எஸ்ஓபி உண்மையில் கடைபிடிக்கப்படுகிறது.

“நாங்கள் சரியானவர்கள் (perfect) என்று நாங்கள் கூறவில்லை, ஆனால் நாங்கள் அமைத்த எஸ்ஓபி-களுடன் பள்ளிகளில் தொற்றுநோய்களைக் குறைக்க முடியும் என்பதை உறுதிப்படுத்த நாங்கள் எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம்,” என்று அவர் கூறினார்.

குழந்தைகள் பள்ளி செல்ல உற்சாகமாக உள்ளனர்

உறைவிடப் பள்ளிகளில் எஸ்ஓபி இணக்கத்தைக் கடுமையாக்க உள்ளதாக ராட்ஸி கூறினார், கல்வியமைச்சால் அமைக்கப்பட்ட ஒரு சிறப்பு பணிக்குழுவின் மூலம் எஸ்ஓபி இணக்க நடவடிக்கைகள் மேம்படுத்தப்படும்.

இருப்பினும், நிலைமை மோசமடைந்து, தேசியப் பாதுகாப்பு மன்றத்தின் உத்தரவு வந்தால், பள்ளிகள் மூடப்படும்.

ரெட்ஸி சிவப்பு மண்டல பகுதிகளுக்கும், இயக்கம் கட்டுப்பாட்டு உத்தரவின் கீழ் (பி.கே.பி) பி.கே.பி இறுக்கப்படாவிட்டால் (பி.கே.பி.டி) பள்ளிகள் மூடப்படாது என்றார்.

மார்ச் 1 முதல் ஏப்ரல் 23 வரை, பள்ளி வருகை விழுக்காட்டையும் ராட்ஸி பகிர்ந்து கொண்டார், இது 90.26 விழுக்காடு ஆகும்.

“இதன் பொருள் என்னவென்றால், தொற்றின் எண்ணிக்கை உயர்நிலையில் இருந்தபோதிலும், ஒரு மாணவர் பள்ளியில் நுழைந்தால், கற்றல் நிலை நன்றாகவும் பாதுகாப்பாகவும் செல்கிறது.

“நாங்கள் குழந்தைகளிடம் கேட்கும்போது, ​​அவர்கள் பள்ளிக்குச் செல்ல உற்சாகமாக இருக்கிறார்கள். ஆசிரியர்கள் மாணவர் தேர்ச்சி அளவை காண முடிகிறது, அவர்கள் கிடைக்கக்கூடிய நேரத்தைப் பயன்படுத்தி மாணவர்களைக் குறைந்தபட்ச தேர்ச்சிக்குக் கொண்டு செல்கிறார்கள்,” என்று அவர் கூறினார்.

இந்தக் கட்டத்தில் பள்ளியை மூடுவதற்கான முடிவு எளிதான முடிவாக இருக்கலாம், ஆனால் அது சரியான முடிவாக இருக்காது என்று அவர் கூறினார்.

  • பெர்னாமா