அவருக்கும் அம்னோ தலைவர் டாக்டர் அஹ்மத் ஜாஹிட் ஹமீடிக்கும் இடையே நடந்த உரையாடலைக் குறிப்பதாகக் கூறப்படும் ஆடியோ பதிவு குறித்து, எதிர்க்கட்சித் தலைவர் அன்வர் இப்ராஹிமிடம் வாக்குமூலம் எடுத்துள்ளதை அரச மலேசியக் காவல்துறை உறுதிப்படுத்தியது.
குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 108 (2) கீழ் விசாரணை நடத்த, கோலாலம்பூர், புக்கிட் அமான் வகைப்படுத்தப்பட்ட குற்றவியல் புலனாய்வு பிரிவு அலுவலகத்தில் ஆஜராகுமாறு அன்வரிடம் கேட்டுக் கொள்ளப்பட்டதாகப் புக்கிட் அமான் குற்றவியல் புலனாய்வுத் துறை இயக்குநர் ஹுசிர் முகமது தெரிவித்தார்.
“தண்டனைச் சட்டத்தின் பிரிவு 505 (b)-இன் படி விசாரணைகள் நடத்தப்படுகின்றன, இது பொது மிரட்டலை ஏற்படுத்தும் அல்லது ஏற்படுத்தக்கூடிய ஓர் அறிக்கை மற்றும் தகவல் தொடர்பு மற்றும் பல்லூடகச் சட்டத்தின் பிரிவு 233 ஆகும், இது வலையமைப்பு வசதிகள் அல்லது பிணைய சேவைகளின் முறையற்ற பயன்பாடாகும்,” அவர் இன்று ஒரு அறிக்கையில் கூறினார்.
பி.கே.ஆர். தலைவரை வரவழைக்கும் நடவடிக்கை, ஆடியோ பதிவு செய்த நபரை அடையாளம் காண உதவுவதோடு, நான்கு நிமிடங்கள் 17 வினாடிகள் நீடித்த ஆடியோ மையக்கருத்தையும் அடையாளம் காண உதவுவதைத் தவிர, இது விசாரணையை முடிக்க ஒரு சாதாரண நடைமுறை என்று அவர் கூறினார்.
17 அரசியல் பிரதிநிதிகளிடமிருந்தும், ஒரு பொது நபரிடமிருந்தும் மொத்தம் 18 போலிஸ் புகார்கள் கிடைத்தன, நம்பகத்தன்மையைத் தீர்மானிக்க விசாரணை மேற்கொள்ளப்பட்டது, இது இரு அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்கள் இடையே அச்சத்தைத் தூண்டி, ஒற்றுமையைச் சீர்குழைக்கும் நடவடிக்கை என ஹூசிர் சொன்னார்.
உரையாடலின் ஆடியோ பதிவு பரவியது பல்வேறு எதிர்மறையான கருத்துக்களை அளித்துள்ளதாகவும், இரு நபர்களும் செல்வாக்கு மிக்க அரசியல் தலைவர்களாக இருப்பதால் சமூக ஊடகங்களின் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு, மக்களிடையேக் கவலையை எழுப்பியதாகவும் அவர் கூறினார்.
-பெர்னாமா