பி.என்.பி தலைவராக அரிஃபின் ஜக்காரியா நியமிக்கப்படுவார்

பெர்மோடலன் நேஷனல் பெர்ஹாட்டின் (பி.என்.பி.) புதியத் தலைவராக, முன்னாள் தலைமை நீதிபதி அரிஃபின் ஜக்காரியா நியமிக்கப்பட உள்ளதாக ஓர் அறிக்கை தெரிவிக்கிறது.

ஆதாரங்களை மேற்கோள் காட்டி, பி.என்.பி.யின் தலைவராக ஸெட்டி அக்தார் அஸிஸ்-க்குப் பதிலாக அரிஃபின் நியமிக்கப்படுவார் என தி எட்ஜ் செய்தி ஊடகம் கூறியுள்ளது.

மலேசியாவின் மிகப்பெரிய நிதி மேலாண்மை நிறுவனமான பி.என்.பி.-யில், மூன்று ஆண்டு பதவிக்காலத்தை நிறைவு செய்தபின்னர், எதிர்வரும் ஏப்ரல் 30-ம் தேதி ஸெட்டி ஓய்வு பெறவுள்ளார்.

2011 முதல் 2017 வரை நாட்டின் தலைமை நீதிபதியாக ஆரிஃபின் இருந்தார்.

கடந்த வாரம், இரண்டு ஆண்டு காலத்திற்கு ஆசிய சர்வதேச நடுவர் (AIAC) ஆலோசனைக் குழுவின் தலைவராக அவர் அறிவிக்கப்பட்டார்.

அவசரகால நிலையை அறிவிப்பது குறித்து, யாங் டி-பெர்டுவான் அகோங்கிற்கு ஆலோசனை வழங்கும் சிறப்பு அவசர-சுயாதீன குழுவிற்கும் ஆரிஃபின் தலைமை தாங்குகிறார்.

இது தவிர, கட்டுமான மற்றும் உள்கட்டமைப்பு நிறுவனமான வெர்டிஸ் பெர்ஹாட்டின் தலைவராகவும் அந்த முன்னாள் நீதிபதி விளங்குகிறார்.