#புகாபுவாசாபார்லிமென்ட் : 90 பங்கேற்பாளர்களையும் காவல்துறை அழைக்கும்

கோலாலம்பூர், ஜாலான் பார்லிமெனில், நேற்று நடந்த #புகாபுவாசபார்லிமென் (#BukaPuasaParlimen) அமைதி பேரணியில் பங்கேற்ற அனைவரிடமும் போலிசார் வாக்குமூலம் எடுப்பார்கள்.

அவர்கள் அனைவரும் விரைவில் அழைக்கப்படுவார்கள் என்றும், இதுவரை பேரணியில் பங்கேற்ற 90 பேரைப் போலீசார் அடையாளம் கண்டுள்ளதாகவும் டாங் வாங்கி காவல்துறைத் தலைவர் ஏசிபி மொஹமட் ஜைனல் அப்துல்லா தெரிவித்தார்.

அப்பேரணிக்கு அனுமதி இல்லை என்றும், பேரணியை நடத்த அமைப்பாளர்களிடமிருந்து காவல்துறை விண்ணப்பம் பெறவில்லை என்றும் அவர் கூறினார்.

“அந்த இடத்தில் பார்ந்தபோது, ​​கூடியிருந்த பங்கேற்பாளர்கள் மூடா மற்றும் பெஜூவாங் கட்சிகளைச் சார்ந்த தலைவர்களும் உறுப்பினர்களுமாகத் தெரிந்தது,” என்று அவர் இன்று தொடர்பு கொண்டபோது கூறினார்.

முன்னறிவிப்பின்றி ஓர் ஒன்றுகூடலை நடத்தியதற்காக, அமைதியான ஒன்றுகூடுதல் சட்டம் 2012 பிரிவு 9 (5)-இன் கீழ், இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது என்றார் அவர்.

  • பெர்னாமா