இன்று 2,500 புதிய நேர்வுகள், 18 மரணங்கள்

கோவிட் 19 | நாட்டில் இன்று நண்பகல் வரையில், 2,500 கோவிட் -19 புதிய நேர்வுகள் பதிவாகியுள்ளன. அவற்றுள் 4 வெளியிலிருந்து வந்தவை எனச் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும், இன்று 18 மரணங்கள் புகாரளிக்கப்பட்டுள்ளன. ஆக, இதுவரை இந்நோய்க்கு நாட்டில் 1,551 பேர் பலியாகியுள்ளனர்.

இன்று 2,068 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அவசரப் பிரிவில் 352 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் 186 பேருக்குச் சுவாசக் கருவியின் உதவி தேவைப்படுகிறது.

லாபுவான் மற்றும் பெர்லிஸில் இன்று புதியத் தொற்றுகள் எதுவும் பதிவாகவில்லை.

மாநிலங்கள் வாரியாகப் புதியத் தொற்றின் எண்ணிக்கை பின்வருமாறு :-

சிலாங்கூர் – 637 (135,486), சபா – 57 (58,372), ஜொகூர் – 205 (46,105), கோலாலம்பூர் – 200 (44,369), சரவாக் – 356 (32,047), பினாங்கு – 194 (20,278), நெகிரி செம்பிலான் – 97 (19,009), கிளந்தான் – 401 (15,075), பேராக் – 59 (14,949), கெடா – 103 (10,239), மலாக்கா – 95 (7,584), பஹாங் – 55 (5,325), திரெங்கானு – 38 (4,457), புத்ராஜெயா – 3 (1,386).

இன்று 9 புதியத் திரளைகள் கண்டறியப்பட்டன.