இந்தியாவிலிருந்து கோவிட் -19 வேரியண்ட் (மாறுபாடு) (பி.1.617) பரவுவது குறித்த கவலைகள் காரணமாக இலங்கை, வங்காளதேசம், நேபாளம் மற்றும் பாக்கிஸ்தான் குடிமக்கள் நாட்டிற்குள் நுழைவதை மலேசிய அரசாங்கம் தடை செய்துள்ளது.
பாதுகாப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப், இந்த நடவடிக்கை ஏப்ரல் 28-ம் தேதி அறிவிக்கப்பட்ட இந்தியாவுக்கான விமானத் தடைகளுடன் இணைந்தது என்றார்.
நீண்ட கால சமூக வருகை, சர்வதேச வணிக வருகையாளர்கள் மற்றும் சமூக வருகை நுழைவு இசைவுச் சீட்டு (பாஸ்) வைத்திருப்பவர்கள் என அனைத்து வகையினருக்கும் இந்தக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாக இஸ்மாயில் கூறினார்.
“இருப்பினும், 1961 இராஜதந்திர உறவுகள் தொடர்பாக வியன்னா மாநாட்டில் வழங்கப்பட்டுள்ளபடி, இராஜதந்திரம் மற்றும் உத்தியோகபூர்வக் கடப்பிதழ்கள் வைத்திருப்பவர்களுக்கு விலக்கு அளிக்கப்படுகிறது,” என்று அவர் நேற்று புத்ராஜெயாவில் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.
இராஜதந்திர மற்றும் உத்தியோகபூர்வக் கடப்பிதழ்கள் வைத்திருப்பவர்கள், தற்போதுள்ள செந்தர இயங்குதல் நடைமுறைகளுக்கு (எஸ்ஓபி) இணங்க மலேசியாவிற்குள் நுழைய விண்ணப்பிக்கலாம் என்று இஸ்மாயில் கூறினார்.
உலகில் கோவிட் -19 நேர்மறை வழக்குகளின் மிக மோசமான எழுச்சியை இந்தியா கண்டுள்ளது.
நேற்று, 382,000-க்கும் மேற்பட்ட புதிய நேர்வுகள் அங்குப் பதிவாகியுள்ளன, இது பிரேசிலை விட ஐந்து மடங்கு அதிகம், இது உலகின் இரண்டாவது அதிக தொற்றுநோயைக் கொண்ட நாடாக இந்தியாவைக் காட்டுகிறது.
இத்தகையப் பரிமாற்றத்திற்கு முக்கியக் காரணம் மாறுபாடு B.1.617 ஆகும்.
இத்தகைய மாறுபாடுகள் மிகவும் கடுமையான அறிகுறிகளை ஏற்படுத்தும் என்றும் பூர்வாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வங்காளதேசம், பாகிஸ்தான், நேபாளம் மற்றும் இலங்கை ஆகியவை இந்தியாவின் அண்டை நாடுகளாகும், பி.1.617 மாறுபாடு அந்த நாடுகளுக்கும் பரவியுள்ளது.