கோவிட் 19 | நாட்டில் இன்று நண்பகல் வரையில், 3,733 கோவிட் -19 புதிய நேர்வுகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
கடந்த இரண்டு நாள்களைவிட இன்று இந்த எண்ணிக்கையில் சற்று சரிவு ஏற்பட்டுள்ளது.
இன்று, 100 புதியத் தொற்றுநோய்களைப் பதிவுசெய்த பஹாங், ஜனவரி 14-க்குப் பிறகு முதல் முறையாக மூன்று இலக்க அதிகரிப்பைப் பதிவுசெய்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
பஹாங், குவாந்தானில் நாளை தொடங்கி நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை (பி.கே.பி) 3.0 அமல்படுத்தபப்டும்.
இதற்கிடையில், இன்று 26 மரணங்கள் புகாரளிக்கப்பட்டுள்ளன. இது நாட்டில் பதிவான தினசரி மரண எண்ணிக்கையின் ஆக அதிக எண்ணிக்கையாகும். இதுவரை இந்நோய்க்கு நாட்டில் 1,683 பேர் பலியாகியுள்ளனர்.
இன்று 3,211 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அவசரப் பிரிவில் 416 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் 216 பேருக்குச் சுவாசக் கருவியின் உதவி தேவைப்படுகிறது.
நாட்டில் இன்று அனைத்து மாநிலங்களிலும் புதியத் தொற்றுகள் பதிவாகியுள்ளன.
மாநிலங்கள் வாரியாகப் புதியத் தொற்றின் எண்ணிக்கை பின்வருமாறு :-
சிலாங்கூர் – 1,278, சரவாக் – 454, கோலாலம்பூர் – 338, ஜொகூர் – 365, பினாங்கு – 280, கிளந்தான் – 254, நெகிரி செம்பிலான் – 205, கெடா – 176, பஹாங் – 100, பேராக் – 80, மலாக்கா – 66, சபா – 61, திரெங்கானு – 49, புத்ராஜெயா – 20, லாபுவான் – 6, பெர்லிஸ் – 1.