இன்று 3,973 புதிய நேர்வுகள், 22 மரணங்கள்

கோவிட் 19 | நாட்டில் இன்று நண்பகல் வரையில், 3,973 கோவிட் -19 புதிய நேர்வுகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இது செயலில் உள்ள நேர்வுகளை 38,499 அதிகரித்துள்ளது.

புத்ராஜெயாவில் உள்ள பிரதமர் அலுவலகத்தில், மூத்த அமைச்சர் (பாதுகாப்பு) இஸ்மாயில் சப்ரி யாகோப்புடன், சுகாதாரத் தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா செய்தியாளர் கூட்டத்தில் கலந்துகொண்டார்.

இன்று 2,824 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அவசரச் சிகிச்சைப் பிரிவில் 453 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் 224 பேருக்குச் சுவாசக் கருவியின் உதவி தேவைப்படுகிறது என்றும் டாக்டர் ஹிஷாம் தெரிவித்தார்.

இதற்கிடையில், இன்று 22 மரணங்கள் புகாரளிக்கப்பட்டுள்ளன. இறந்தவர்கள் அனைவரும் மலேசியர்கள். இதுவரை இந்நோய்க்கு நாட்டில் 1,722 பேர் பலியாகியுள்ளனர்.

பெர்லிஸில் இன்று புதியத் தொற்றுகள் எதுவும் பதிவாகவில்லை.

மாநிலங்கள் வாரியாகப் புதியத் தொற்றின் எண்ணிக்கை பின்வருமாறு :-

சிலாங்கூர் (1,328), சரவாக் (512), கோலாலம்பூர் (483), ஜொகூர் (384), கிளந்தான் (321), பினாங்கு (187), கெடா (174), பேராக் (140), நெகிரி செம்பிலான் (126), திரெங்கானு (93), பஹாங் (85), மலாக்கா (79), சபா (50), புத்ராஜெயா (8), லாபுவான் (3).

இன்று 13 புதியத் திரளைகள் கண்டறியப்பட்டன.