இரத்த கையிருப்பு குறைந்து வருகிறது, நன்கொடையாளர்கள் தேவை

கடந்த வாரம் முதல், இரத்த கையிருப்பு மிகக் குறைவாக இருப்பதால், தேசிய இரத்த மையம் (பி.டி.என்.) நன்கொடையாளர்களை இரத்ததானம் செய்ய முன்வருமாறு கேட்டுக்கொள்கிறது.

“இந்த ஒரு வாரமாக வேண்டிகேட்டு, காத்திருக்கிறோம், இரத்தக் கையிருப்பு மிகக் குறைவாகவே உள்ளது. தேவைப்படும் நோயாளிகளுக்கு உதவுங்கள்,” என்று நேற்று பி.டி.என். முகநூலில் பதிவேற்றியச் சுவரொட்டி அறிக்கை தெரிவித்தது.

‘AB’ வகை இரத்தக் கையிருப்பு பாதுகாப்பான மட்டத்தில் இருப்பதையும் சுவரொட்டி காட்டியது, ஆனால் இந்த நேரத்தில் ‘A’ வகை இரத்தத்தின் பற்றாக்குறை இருக்கிறது.

இதற்கிடையில், ‘B’ வகை மற்றும் ‘O’ வகை இரத்தத்திற்கான கையிருப்பும் மிகக் குறைவாக உள்ளது.

தகுதியான நன்கொடையாளர்களை, அருகிலுள்ள இரத்த தான மையத்திற்கு வருமாறு பி.டி.என். கேட்டுக்கொள்கிறது.

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையைப் (பி.கே.பி.) பின்பற்றி, பயணக் கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் ஒரு சுமுகமானப் பயணத்தை மேற்கொள்ள, பி.டி.என். வலைத்தளத்திலிருந்து நியமனச் சீட்டுகளைப் பெறலாம்.

இரத்த தானம் செய்ய முடியாதவர்களை, இத்தகவல்களைப் பகிர்ந்து உதவுமாறு பி.டி.என். கேட்டுக்கொள்கிறது.

பதிவுக்காக, சமீபத்தில் தடுப்பூசி போடப்பட்டவர்கள் தங்கள் இரத்த தானத்தைக் குறைந்தது ஒரு வாரத்திற்கு ஒத்திவைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

தடுப்பூசி எடுக்கப்பட்ட தருணத்திலிருந்து ஒரு வார காலம் கணக்கிடப்படுகிறது, இலேசான பக்க விளைவுகள் ஏதும் இல்லாவிட்டால், அல்லது இலேசான பக்க விளைவுகள் இருந்து, அதிலிருந்து மீட்கப்பட்ட பின்னர்.

முகநூலின் ஒரு தனி இடுகையில், இரத்த தானம் செய்ய முன்வந்தவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதைக் கண்டு பி.டி.என். தனது ஏமாற்றத்தையும் பகிர்ந்து கொண்டது.

“வருத்தமாக இருக்கிறது, இந்த நேரத்தில் நாம் விவரிக்கக்கூடிய உணர்வு இதுதான். மதியம் 1.00 மணி நிலவரப்படி, இந்த இடத்தில் ஒரு பை இரத்தம் மட்டுமே வெற்றிகரமாக எடுக்கப்பட்டுள்ளது.

“எங்களுக்கு உதவுங்கள். தேவைப்படும் நோயாளிகளுக்கு உதவ இரத்ததானம் செய்யுங்கள். இரத்த தானம் செய்ய முன்வாருங்கள்,” என்று அது கூறியது.

கிள்ளான் பள்ளத்தாக்கிலுள்ள இரத்ததான மையங்கள் மற்றும் மொபைல் இரத்த தான இடங்களின் பட்டியலை இங்கே http://pdn.gov.my/index.php?option=com_jevents காணலாம்.

கிள்ளான் பள்ளத்தாக்குக்கு வெளியே உள்ளவர்கள், அந்தந்த மாநிலங்களில் உள்ள இரத்ததான மையங்களுக்குச் செல்லலாம்.