பேராக் அதிகத் தொற்று வீதத்தைப் பதிவு செய்தது

நேற்று, நாடு முழுவதும் கோவிட் -19 தொற்று விகிதம் (Rt) ஆர்.டி. 1.14 ஆக இருந்தது, பேராக் மிக உயர்ந்த ஆர்.டி.-ஐ 1.32 பதிவு செய்தது.

சுகாதாரத் தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா, தனது கீச்சகக் கணக்கில் பகிர்ந்த ஒரு விளக்கப்படம், திரெங்கானு இரண்டாவது மிக உயர்ந்த ஆர்.டி. மதிப்பை (1.29) பதிவு செய்துள்ளதாகக் காட்டியது.

கெடா (1.22); பினாங்கு (1.21); மலாக்கா (1.18); சிலாங்கூர் மற்றும் ஜொகூர் (முறையே 1.17); நெகிரி செம்பிலான் (1.12); பஹாங் (1.11) மற்றும் கோலாலம்பூர் (1.10) என பதிவு செய்துள்ளன.

புத்ராஜெயா (0.99); சரவாக் (0.98); கிளந்தான் (0.94) மற்றும் சபா (0.89) ஒன்றுக்கும் கீழே வாசிப்புகளைப் பதிவுசெய்தன.

  • பெர்னாமா