இன்று 4,113 புதிய நேர்வுகள், 34 மரணங்கள்

கோவிட் 19 | நாட்டில் இன்று நண்பகல் வரையில், 4,113 கோவிட் -19 புதிய நேர்வுகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

தீபகற்ப மலேசியாவில், 2 மாவட்டங்கள் (திரெங்கானு, கெமாமான் & உலு திரெங்கானு) மட்டுமே பச்சை மண்டலங்களாக உள்ள நிலையில், மற்ற அனைத்து பகுதிகளும் ஆபத்தான மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

இதற்கிடையில், இன்று 347 மரணங்கள் புகாரளிக்கப்பட்டுள்ளன. இறந்தவர்கள் அனைவரும் மலேசியர்கள். இதுவரை இந்நோய்க்கு நாட்டில் 1,822 பேர் பலியாகியுள்ளனர்.

இன்று 4,190 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அவசரப் பிரிவில் 482 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் 250 பேருக்குச் சுவாசக் கருவியின் உதவி தேவைப்படுகிறது.

நாட்டில் இன்று அனைத்து மாநிலங்களிலும் புதியத் தொற்றுகள் பதிவாகியுள்ளன.

மாநிலங்கள் வாரியாகப் புதியத் தொற்றின் எண்ணிக்கை பின்வருமாறு :-

சிலாங்கூர் – 1,269 (150,881), சரவாக் – 533 (37,654), கிளந்தான் – 371 (18,758), ஜொகூர் – 335 (49,762), கோலாலம்பூர் – 306 (49,068), பினாங்கு – 266 (23,253), கெடா – 228 (12,243), பஹாங் – 178 (6,248), திரெங்கானு – 165 (5,407), பேராக் – 147 (16,484), மலாக்கா – 107 (8,452), சபா – 53 (59,202), புத்ராஜெயா – 20 (1,512), லாபுவான் – 6 (2,507), பெர்லிஸ் – 5 (387).