மலேசியாவில் உள்ள அனைவருக்கும், அஸ்ட்ராசெனெகா தடுப்பூசி ஆர்டர்கள் திறக்கப்பட்டுள்ளன என சமூக ஊடகத் தளங்களில் பரவிவரும் குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்று கோவிட் -19 தடுப்பூசி வழங்கல் அணுகல் உத்தரவாதச் சிறப்புக் குழு (ஜே.கே.ஜே.எ.வி.) தெரிவித்துள்ளது.
நேற்று ஓர் அறிக்கையில், அக்குழு அனுப்பிய இணைப்பு https://www.vaksincovid.gov.my/en/register என்பது தேசியக் கோவிட் -19 நோய்த்தடுப்பு திட்டத்தைப் பதிவு செய்வதற்காக மட்டுமே, அஸ்ட்ராஸெனெகா தடுப்பூசிக்கு அல்ல.
எனவே, இதுபோன்றப் போலி செய்திகளைப் பற்றி எச்சரிக்கையாக இருக்கவும், முகநூல், படவரி அல்லது கீச்சகம் KJKJAVMY கணக்கில் தங்கள் வலைத்தளம் அல்லது சமூக ஊடகங்கள் மூலமாக மட்டுமே உண்மையான தகவல்களைப் பெறவும் அக்குழு பொது மக்களை அறிவுறுத்தியது.
- பெர்னாமா