முழுமையான பி.கே.பி. – அமல்படுத்துமாறு முஹைதீனுக்கு அம்னோ வலியுறுத்து

சமீபத்திய வாரங்களில் மோசமடைந்து வரும் கோவிட் -19 பரவலைக் கையாள்வதில் முழு அடைப்பு உத்தரவை அமல்படுத்துவது குறித்து அரசாங்கம் பரிசீலிக்க வேண்டும் என்று இரண்டு அம்னோ தலைவர்கள் பரிந்துரைத்தனர்.

அந்தக் காலகட்டத்தில், மக்களுக்குச் சிறப்பு நிதி உதவியுடன், 21 நாட்களுக்கு இது செயல்படுத்தப்பட வேண்டும் என்று அம்னோ இளைஞர்கள் முன்மொழிந்தனர்.

“கூடுதல் கட்டணம் ஏதும் இல்லாமல், மூன்று மாதங்களுக்கு ஐ-சினார் 2.0, ஐ-லெஸ்தாரி 2.0 மற்றும் மொராடோரியம் நீட்டிப்பு ஆகியவற்றுடன், மக்களுக்குச் சிறப்பு உதவி வழங்க வேண்டும்,” என்று அம்னோ இளைஞர் தலைவர் அஷ்ராஃப் வாஜ்டி டுசுக்கி கூறினார்.

கோவிட் -19 நோய்த்தொற்றின் சங்கிலியை உடைக்க, வீடுகளை விட்டு வெளியேறாமல் மக்கள் ஒழுங்கைக் கடைபிடிக்க வேண்டும் என்று வலியுறுத்திய ஜொகூர் சுல்தான் சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கந்தரின் கூற்றை அரசாங்கம் பின்பற்ற வேண்டும் என்றார் அவர்.

“கடுமையான மற்றும் நிலையான வலியைத் தாங்குவதற்குப் பதிலாக, இப்போது கசப்பான மருந்தை விழுங்குவோம்,” என்று அவர் சுல்தானின் அறிக்கையை மேற்கோள் காட்டி கூறினார்.

கிட்டத்தட்ட இப்போது நாடு முழுவதும் பி.கே.பி.-யின் கீழ் இருந்தாலும், கடந்த ஆண்டு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டதைப் போல இது கண்டிப்பானதாக இல்லை, முன்பு கிட்டத்தட்ட அனைத்து வணிகங்களும் மூடப்பட்டு, மக்கள் நல்ல காரணமின்றி வீடுகளை விட்டு வெளியேறக்கூடாது என்று உத்தரவிடப்பட்டிருந்தது.

தற்போது இந்தப் பி.கே.பி, பி.கே.பி 3.0 என அழைக்கப்படுகிறது, இது மே 12-ம் தேதி தொடங்கியது.

இது செயல்படுத்தப்பட்ட 16 நாட்களுக்குப் பிறகு, கோவிட் -19 இறப்புகள் மற்றும் தீவிரச் சிகிச்சை நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், இந்தச் செயல்பாடு செயல்திறனை இன்னும் காட்டவில்லை.

உள்நாட்டு உற்பத்தியில் வெறி கொள்ள வேண்டாம்

இதற்கிடையில், ஒரு முகநூல் வீடியோ அறிக்கையில், அம்னோ தகவல் பிரிவுத் தலைவர் ஷாரில் ஹம்டான், பற்றாக்குறையை விட மக்களின் உயிரைப் பற்றி அரசாங்கம் அதிகம் சிந்திக்க வேண்டும் என்றார்.

பி.கே.பி. 1.0-இன் போது, அரசாங்கத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகக் கூறப்பட்ட RM2.4 பில்லியன் இழப்பு மக்களால் ஏற்பட்ட இழப்பு அல்ல, ஆனால் உண்மையில் இது மொத்த உள்நாட்டு உற்பத்தியாகும் (கே.டி.என்.கே.), பி.கே.பி செயல்படுத்தப்பட்டதன் விளைவாக இது உற்பத்தி செய்யப்படாது என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

“முழு பி.கே.பி. செயல்படுத்தப்பட்டால், கடந்த ஆண்டு (மார்ச் மற்றும் ஏப்ரல்) பி.கே.பி 1.0-ஐப் போலவே நாட்டு ஒவ்வொரு நாளும் RM2.4 பில்லியன் இழப்பு ஏற்படும் என்பதை அரசாங்கம் அடிக்கடி நமக்கு நினைவூட்டுகிறது.

“… மொத்த உள்நாட்டு உற்பத்தியை அரசாங்கம் மறந்துவிட்டால், வருமானத்தையும் வேலைகளையும் தற்காலிகமாக மக்களுக்குப் பாதுகாத்தால், முழு அடைப்பு நிலையில், அது சிறந்த வழி அல்லவா?

“… மலேசிய அரசாங்கம் பற்றாக்குறையையும் கடனைப் பற்றியும் மிகவும் பயப்படுவதால், முழு கதவடைப்பை அது விரும்பவில்லை என்று நான் நினைக்கிறேன்,” என்றார் அவர்.

உலகில் எந்தவொரு நாடும், மக்களின் நலன் மற்றும் அவர்களின் பொருளாதாரத் துறைகளில் வணிகத் தொடர்ச்சிக்கு முன்னுரிமை அளிக்கிறதே தவிர பற்றாக்குறை இலக்குகளுக்கு அல்ல என்றார்.

“முழு உலகமும் இரு மடங்கு சுகாதார மற்றும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்கிறது, உலகின் நவீன வரலாற்றில் இது மிக மோசமானது.

“பொருளாதாரத்தைக் காப்பாற்றுவதன் முக்கியத்துவத்திற்கும் உயிர்களைக் காப்பாற்றுவதன் முக்கியத்துவத்திற்கும் இடையில் உள்ள சமநிலை அவசியத்தை மக்கள் புரிந்துகொள்வார்கள் என்று நான் நம்புகிறேன்.

“ஆனால் பொருளாதாரத்தை மட்டும் காப்பாற்றி, ஒவ்வொரு நாளும் கோவிட் -19 தொற்று எண்ணிக்கை அதிகரித்தால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்தால், அதில் அர்த்தம் இல்லை,” என்று அவர் கூறினார்.