7 நிபந்தனைகளுடன் பி.எச். ‘முழு கதவடைப்பை’ ஆதரிக்கிறது

ஜூன் 1 முதல், 14 நாட்களுக்கு நாடு முழுவதும் முழு கதவடைப்பைச் செயல்படுத்த, அரசாங்கம் எடுத்த முடிவைப் பக்காத்தான் ஹராப்பான் ஆதரிக்கிறது.

பி.எச். வாழ்க்கைச் செலவினச் செயற்குழு, அரசாங்கத்திற்கு ஏழு நிபந்தனைகளை விதிப்பதன் மூலம் இந்த ஆதரவு வழங்கப்படுவதாகத் தெரிவித்துள்ளது.

ஏழு நிபந்தனைகளில் மூன்று என்னவென்றால், பி40 மற்றும் எம்40 குழுக்களுக்கு அரசாங்கம் அவ்வப்போது உதவிகளை வழங்க வேண்டும், 3 மாதங்களுக்கு வங்கிக் கடன்களை ஒத்திவைக்க வேண்டும், அதோடு மின்சாரக் கட்டணத்தில் தள்ளுபடி செய்ய வேண்டும்.

மற்றொரு நிபந்தனை என்னவென்றால், அன்றாடத் தேவைகளைப் போதுமான அளவில் வழங்குவதை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும்; அத்தியாவசியப் பொருட்களின் விலை உயராமல், பொருள்கள் எல்லா இடங்களுக்கும் வழங்கப்படுவதோடு, உணவு கூடைகள் வடிவத்தில் உதவிகள் தேவைப்படும் மக்களைச் சென்றடைவதை உறுதிசெய்ய வேண்டும்.

மலேசியாவில், கோவிட் -19 பரவலின் தற்போதைய நிலைமையைக் கணக்கில் எடுத்துக் கொண்ட பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது, அன்றாட வழக்குகளின் எண்ணிக்கை 8,000-க்கும் அதிகமாகவும், செயலில் உள்ள வழக்குகள் 70,000-ஐத் தாண்டியும் உள்ளன.

கோவிட் -19 தொற்றின் தினசரி நேர்வுகளைக் குறைப்பதில், இந்த முதல் கட்ட முழு கதவடைப்பு வெற்றி பெற்றால், அரசாங்கம் இரண்டாம் கட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டைச் செயல்படுத்தும்.