‘மலாய்க்காரர் அல்லாதவர் ஏஜி ஆவது சாத்தியமற்றது அல்ல’

இந்த நாட்டில் சட்டத்துறை தலைவராக நியமிக்கப்பட்ட முதல் மலாய்க்காரர் அல்லாத தோமி தாமஸ், எதிர்காலத்தில் இதுபோன்ற நியமனங்களை மலேசியா எதிர்பார்க்கலாம் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

இருப்பினும், தாமஸ் ஆஸ்ட்ரோ அவானிக்கு அளித்த பேட்டியில், அதை நடைமுறைபடுத்துவது அரசியல் தலைவர்களைப் பொறுத்தது என்றார்.

“உங்கள் கேள்விக்குப் பதில், ‘நான் சிறந்த மற்றும் புத்திசாலித்தனமான தலைவரைத் தேர்வு செய்ய விரும்புகிறேன், எனது அமைச்சரவையில் 10 சீனர்கள், ஐந்து இந்தியர்கள், மற்றும் சபா சரவாக்கைச் சேர்ந்த ஐவர் இருப்பார்கள்’’ என்று, இன்று ஒரு பிரதமர் சொல்ல முடியாது என்பதற்கு எந்தக் காரணமும் இல்லை.

“எதுவும் மாறாது. சூரியன் தொடர்ந்து பிரகாசிக்கும், பறவைகள் தொடர்ந்து கூச்சலிடும், மலேசியா ஒரு நிலையான நாடு.

“இது உண்மையில் தலைவர்களைப் பொறுத்தது, அரசியல் தலைவர்கள் வழிநடத்த வேண்டியது,” என்று அவர் கூறினார்.

மகாதிர் முகமதுவின் தலைமையின் போது, என்ன நடந்தாலும் சரியென்று, அவர் அந்த நேரத்தில் தனது பதவியை 20 மாதங்கள் தக்க வைத்ததைத் தாமஸ் சுட்டிக்காட்டினார்.

2018-இல், தாமஸ் மகாதீர் தலைமையிலான அப்போதைய பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கத்தால் சட்டத்துறை தலைவராக (ஏஜி) நியமிக்கப்பட்டார்.

இது கூட்டணி அரசாங்கம் மற்றும் மகாதிர் மீது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது, குறிப்பாக, மலாய்-முஸ்லிம்களுக்கு இதுபோன்ற முக்கியமான பதவி வழங்கப்பட வேண்டும் என்று விரும்புகிற குழுவில் இருந்து.

பிப்ரவரி 2020-இல் நடந்த சதித்திட்டத்தைத் தொடர்ந்து, பி.எச். அரசாங்கம் வீழ்ந்து, மகாதீர் இரண்டாவது முறையாகப் பிரதமர் பதவியில் இருந்து விலகியபோது,  தாமஸின் பதவிக்காலம் நீண்ட காலம் நீடிக்கவில்லை, தாமஸ் பதவியிலிருந்து விலகினார்.

தாமஸின் கூற்றுப்படி, ஒரு பதவி நியமனத்தை மக்கள் விமர்சிப்பது தவறல்ல, இந்தப் பிரச்சினையை ஓர் இன மற்றும் மதக் கண்ணோட்டத்தில் பார்க்கத் தேர்ந்தெடுப்பவர்கள் உட்பட.

“மக்கள் நியமனங்களை விமர்சிப்பது நியாயமானது என்று நான் நினைக்கிறேன். அது ஜனநாயகம், குறிப்பாக இயங்கலை ஜனநாயகம். நாம் அதை மதிக்க வேண்டும்.

“இயங்கலை விமர்சனத்தில் எந்தப் பிரச்சினையும் இல்லை. மேலும், அந்தப் பிரிவு ஒரு குறிப்பிட்டவரின் தன்மை, ஆளுமை அல்லது பிரச்சினையை இனம் அல்லது மதக் கண்ணோட்டத்தில் கவனம் செலுத்த விரும்பினால், அது அவர்களைப் பொறுத்தது… மலேசியாவில் உள்ள அனைவருக்கும் நீங்கள் கற்பிக்க இயலாது,” என்று அவர் கூறினார் கூறினார்.

இதற்கிடையில், மலேசியாவில் தொற்றுநோய் நிலைமை குறித்து கேட்டபோது, ​​தாமஸ் அரசாங்கத்தால் நடத்தப்படும் கோவிட் -19 நோய்த்தடுப்பு திட்டத்தின் செயல்முறை, குறிப்பாகத் தடுப்பூசி கொள்முதல் செயல்முறை குறித்து கேள்வி எழுப்பினார்.

தாமஸ் தனது பதவியை இன்னும் வகித்திருந்தால், தடுப்பூசிகளை வாங்குவதற்கான ஒப்பந்தங்களைப் பெற்று தருவார் என்றும், இதனால் மலேசியா இந்தப் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் என்றும் கூறினார்.

“தடுப்பூசிகள்தான் தீர்வு (ஒரு தொற்றுநோய்க்கு) என்பது ‘பொது அறிவு’. எனவே, அரசாங்கத்துக்கும் வேறு சிலருக்கும் ஒரு வழக்கறிஞராக செயல்படவும், தடுப்பூசிகளைப் பெற உலகின் அனைத்து நிறுவனங்களுடனும் சென்று ஒப்பந்தம் செய்யவும் நீங்கள் எனக்கு அனுமதி வழங்க வேண்டும்,” என்று அவர் கூறினார்.

அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் இஸ்ரேல் ஆகிய மூன்று நாடுகளும் ஓர் எடுத்துக்காட்டு, அந்த நாடுகளில் தொற்றுநோயைத் தீர்க்கத் தடுப்பூசிகள் உதவியதாக அவர் கூறினார்.

“தடுப்பூசியில் நாம் மிகவும் பின்தங்கியுள்ளோம் (கொள்முதல் அடிப்படையில்),” என்று அவர் கூறினார்.

இருப்பினும், மீண்டும் ஏஜி-யாக பதவி ஏற்பதில் விருப்பமில்லை என்று தாமஸ் கூறினார்.

“எந்தவொரு பதவியையும், இரண்டாம் முறையாக வகிக்க வருபவர்கள், ஒரு மோசமான பதிவையேக் கொண்டிருக்கிறார்கள் என்பதை வரலாறு காட்டுகிறது என்று நான் நினைக்கிறேன்.

“ஆனால், ஒரு சீர்திருத்த மனப்பான்மை கொண்ட அரசாங்கம் இருந்தால், வேறு வழியில் உதவுவதில் நான் மகிழ்ச்சியடைவேன்,” என்று அவர் கூறினார்.