இன்று 6,999 புதிய நேர்வுகள், 79 மரணங்கள்

கோவிட் 19 | நாட்டில், 6,999 கோவிட் -19 புதிய நேர்வுகள் இன்று பதிவாகியுள்ளதாக சுகாதாரத் தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.

சிலாங்கூர் 2,477 நேர்வுகளுடன் இன்னும் முதல் இடத்தில் உள்ளது.

இதற்கிடையில், இன்று 79 மரணங்கள் புகாரளிக்கப்பட்டுள்ளன. இதுவரை இந்நோய்க்கு நாட்டில் மொத்தம் 2,729 பேர் பலியாகியுள்ளனர்.

இன்றைய இறப்புகள் சிலாங்கூர் மற்றும் நெகிரி செம்பிலானில் 15, கெடாவில் 13, ஜொகூரில் 12, பினாங்கில் 5, திரெங்கானு மற்றும் மலாக்காவில் 4 , கோலாலம்பூர் மற்றும் சரவாக்கில் தலா 3, சபாவில் 2, லாபுவான், பேராக் மற்றும் பஹாங்கில் தலா 1 எனப் பதிவாகியுள்ளன.

இன்று 5,121 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அவசரப் பிரிவில் 846 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் 419 பேருக்குச் சுவாசக் கருவியின் உதவி தேவைப்படுகிறது.

நாட்டில் இன்று அனைத்து மாநிலங்களிலும் புதியத் தொற்றுகள் பதிவாகியுள்ளன.

மாநிலங்கள் வாரியாகப் புதியத் தொற்றின் எண்ணிக்கை பின்வருமாறு :-

சிலாங்கூர் – 2,477, கோலாலம்பூர் – 616, கிளந்தான் – 612, சரவாக் – 513, நெகிரி செம்பிலான் – 468, ஜொகூர் – 433, கெடா – 422, பினாங்கு – 248, பஹாங் – 239, திரெங்கானு – 214, பேராக் – 212, மலாக்கா – 202, சபா – 190, லாபுவான் – 133, புத்ராஜெயா – 13, பெர்லிஸ் – 7.

மேலும் இன்று, 17 புதியத்  திரளைகள் கண்டறியப்பட்டுள்ளன.