முக்கியச் சேவைகளைத் தவிர, அனைத்து கட்டுமானப் பணிகளும் நிறுத்தப்பட்டன

முக்கியமான சேவையின் கீழ் பட்டியலிடப்பட்டவைத் தவிர, நாடு முழுவதும் அனைத்து கட்டுமானப் பணிகளும் முழு கதவடைப்பு காலத்தில் நிறுத்தப்பட வேண்டும் என்று பொதுப் பணி துறையின் மூத்த அமைச்சர் ஃபடில்லா யூசோஃப் தெரிவித்தார்.

முக்கியமானப் பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு பணிகள் என்பது, அப்பணிகள் தொடரப்படாவிட்டால், பணியாளர்களுக்கு, பொதுமக்களுக்கு அல்லது சுற்றுச்சூழலுக்கு ஆபத்து அல்லது தீங்கு விளைவிக்கும் வேலைகள் என்று ஃபடில்லா நேற்றிரவு ஓர் அறிக்கையின் மூலம் தெரிவித்தார்.

சரிவுகள், சாலைகள், பாலங்கள், போக்குவரத்து மேலாண்மை கட்டுப்பாடு, போக்குவரத்து விளக்குகள் ஆகியவற்றின் பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு; மின்தூக்கிகள், நகரும் படிகட்டுகள் மற்றும் பிற முக்கியமான இயந்திர மற்றும் மின்சார உபகரணங்களைப் பழுதுபார்ப்பது ஆகியவை இதில் அடங்கும் என்றார்.

முக்கியமானச் சேவையின் கீழ், வளாகங்களில் பழுதுபார்ப்பு, பராமரிப்பு மற்றும் வசதிகளை மேம்படுத்துதல் மற்றும் பராமரிப்பு பணிகள், தேங்கி நிற்கும் தண்ணீரைச் சுத்தம் செய்தல் மற்றும் உலர்த்துதல், கட்டுமான இடங்களில் பூச்சிக்கொல்லிகளைத் தெளித்தல் ஆகியவையும் அடங்கும், ஏடிஸ் கொசுக்கள் மற்றும் பிற பூச்சிகள் வளர்வதைக் தடுக்க.

சுரங்கங்கள், சரிவுகள், பாலங்கள் மற்றும் நெடுஞ்சாலைகள் உள்ளிட்ட பெரிய மற்றும் முக்கியமான பொது உள்கட்டமைப்புகளும் கட்டுமானப் பணிகளில் அடங்கியுள்ளன, அவை 80 விழுக்காடு மற்றும் அதற்கு மேற்பட்ட பணிகள் நிறைவடைந்துள்ளன என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்றால்.

பிற பொது உள்கட்டமைப்புகளில், எம்.ஆர்.டி., எல்.ஆர்.டி., ஈ.சி.ஆர்.எல்., கொமுட்டர், ஒற்றை / இரட்டை தண்டவாளங்கள் மற்றும் இரயில் திட்டங்கள், மின்சாரம் தொடர்பான உள்கட்டமைப்பு, தொலைத்தொடர்பு, அணைகள், வடிகால் மற்றும் கழிவுநீர், எண்ணெய் மற்றும் எரிவாயு ஆகியவையும் அடங்கும்.

80 விழுக்காடு அல்லது அதற்கு மேற்பட்ட பணிகள் நிறைவடைந்த மருத்துவமனை பணிகள் மற்றும் கட்டுமான இடத்தில் முழுமையான பணியாளர்கள் தங்குமிடங்களைக் கொண்ட கட்டிடங்களை நிர்மாணிப்பதும் அதில் பட்டியலிடப்பட்டுள்ளது என்றார் அவர்.

“பட்டியலிடப்பட்ட திட்டங்களில் ஈடுபட்டுள்ள அனைத்து குத்தகையாளர்களும் சி.ஐ.எம்.எஸ். (உள்ளூர் தகவல் மேலாண்மை அமைப்பு) சி.ஐ.டி.பி. (மலேசிய கட்டுமானத் தொழில் மேம்பாட்டு வாரியம்) மூலம் cims.cidb.gov.my இணையதளத்தில், 1 ஜூன் 2021 முதல் பி.கே.பி. காலத்திற்கான புதிய ஒப்புதலைப் பெற வேண்டும்.

முந்தைய அனைத்து ஒப்புதல்களையும் முழு கதவடைப்பு காலத்தில் பயன்படுத்த முடியாது என்றும், அந்த அமைப்பின் மூலம் உருவாக்கப்பட்ட அனுமதி கடிதங்கள் கட்டுமானத் தள வளாகத்தில் பார்வைக்கு வைக்கப்பட வேண்டும் என்றும், அத்திட்டத்தில் ஈடுபட்டுள்ள தரப்பினர்களின் நடமாட்டத்திற்கு அதனை ஒப்புதல் கடிதமாகப் பயன்படுத்தப்படலாம் என்றும் ஃபடில்லா கூறினார்.

அனுமதிக்கப்பட்ட தொழிலாளர்களின் வேலை நேரம் மற்றும் வருகை வழக்கம் போல் இருக்கலாம், ஆனால் தொழிலாளர்களின் எண்ணிக்கை 60 விழுக்காடு மட்டுமே அனுமதிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

ஃபடிலாவின் கூற்றுப்படி, கட்டுமானத் தளங்களில் உள்ள அனைத்து தொழிலாளர்களும் வேலையைத் தொடங்குவதற்கு முன்பு கோவிட்-19 சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும், மேலும் ஒரு கட்டுமானத் தளத்திலிருந்து இன்னொரு இடத்திற்குச் செல்ல அனுமதி இல்லை.

அனுமதிக்கப்பட்ட நிபந்தனைகள் மற்றும் வேலை வகைகளின் விவரங்கள் அனைத்தையும் www.cidb.gov.my என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

  • பெர்னாமா